கொரோனா வைரஸின் தாக்கம் அதிமாகி வருவதால் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.இந்த லாக்டவுன் நேரத்தில் தங்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வருவதாக பலரும் புகார் செய்து வந்தனர்.சில பிரபலங்களும் தங்களுக்கும் மின் கட்டணம் இந்த நேரத்தில் கூடுதலாக வருவதாக தங்கள் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

முதலில் நடிகர் பிரசன்னா சில வாரங்களுக்கு முன் ஒரு ட்வீட் செய்திருந்தார்.ஊரடங்கு நேரத்தில் தனக்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளதாகவும் அதுபோல் உங்கள் யாருக்காவது வந்திருக்கிறதா என்று பிரசன்னா ட்வீட் செய்திருந்தார்.இதனை தொடர்ந்து தமிழக மின்சாரத்துறை எப்படி மின்கணக்குகள் எடுக்கப்படுகிறது என்ற அறிக்கையை வெளியிட்டது.மேலும் பிரசன்னா மார்ச் மாதத்திற்கான கட்டணத்தை செலுத்தாததால் அவருக்கு பில் கூடுதலாக வந்துள்ளது என்றும் விளக்கமளித்தனர்.

இதற்கு பதிலளித்த பிரசன்னா மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும்,நிலுவையில் உள்ள தொகையை கட்டிவிட்டேன் என்றும் தெரிவித்தார்.இவரை தொடர்ந்து
கோ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் கார்த்திகா நாயர்.நடிகை ராதாவின் மகளான இவர் தொடர்ந்து சில தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.தற்போதுள்ள சூழல் காரணமாக மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து வருகிறார் கார்த்திகா.EB பில் கிட்டத்தட்ட ரூ 1 லட்சம் வரை பில் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.லாக்டவுன் நேரத்தில் இப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்று பதிவிட்டார்.

தற்போது நடிகை டாப்ஸீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளது கடந்த 3 மாதங்களாக லாக்டவுனில் உள்ளோம் ஆனால் மின் கட்டணம் உயர்ந்த வண்ணம் உள்ளது நான் எதுவும் புதிய உபகரணங்களும் வாங்கவில்லை எப்படி உயர்கிறது என்று கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும் தன்னுடைய ஆளே இல்லாத மற்றுமொரு அப்பார்ட்மெண்ட்டில் ரூ.52000 பில் வந்திருக்கிறது அங்கு வாரம் ஒரு முறை சென்று சுத்தப்படுத்திவிட்டு வந்துவிடுவோம் அதற்கு எப்படி இவ்வளவு கூடுதலாக வந்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் இவ்வளவு பில் வந்துள்ளது என்றால் யாரேனும் எனக்கு தெரியாமல் அந்த வீட்டை உபயோகப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறன் உங்களுக்கு நன்றி என்று டாப்ஸீ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.