சூர்யா,சாய் பல்லவி,ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் Valentines Day அன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இந்த படத்தை செல்வராகவன் இயக்குக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த டீஸர் பிப்ரவரி 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

Suriya Starrer NGK Teaser Length Revealed In Censor Certificate Teaser Releasing Tomorrow Also Starring Sai Pallavi and Rakul Preet Singh

தற்போது இந்த டீஸரின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது.யூ சான்றிதழ் பெற்றுள்ள இந்த டீஸர் 1 நிமிடம் 6 வினாடிகள் ஓடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.பல எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகும் இந்த டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Suriya Starrer NGK Teaser Length Revealed In Censor Certificate Teaser Releasing Tomorrow Also Starring Sai Pallavi and Rakul Preet Singh