திரையுலகில் முன்னணி நட்சத்திர கதாநாயகனாகவும் சிறந்த தயாரிப்பாளராகவும் தொடர்ந்து ரசிகர்ளுக்கு நல்ல படைப்புகளை வழங்கி வரும் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று & ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ வில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து சூர்யாவின் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரை படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் அவர்கள் தயாரிக்க இயக்குனர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

வருகிற மார்ச் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட பக்கா மாஸ் ப்ரோமோ இதோ…