அரபிக்குத்துபாடல் வரவேற்பு குறித்து மனம் திறந்த பூஜா ஹெக்டே !
By Aravind Selvam | Galatta | March 05, 2022 18:42 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.
செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது.
சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்.பாடல் வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன் நெல்சன்,அனிருத்,சிவகார்த்திகேயனுடன் போனில் விஜய் பேசுவது ப்ரோமோ வெளியிடப்பட்டு ஹிட் அடித்தது.இந்த பாடல் அடுத்து வெளியாகி இணையத்தில் சென்சேஷனல் ஹிட் அடித்து வருகிறது.பல சாதனைகளை இந்த பாடல் முறியடித்துள்ளது.
இந்த பாடல் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து படத்தின் நாயகி பூஜா ஹெக்டே நேற்று நடந்த ராதே ஷ்யாம் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.இந்த பாடலை உலகம் முழுவதும் பலரும் ரசித்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பீஸ்ட் குறித்து மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.