2019 லோக்சபா தேர்தல் முடிந்து பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.பிரதமர் மோடியின் பதிவியேற்பு விழாவிற்காக இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள்,அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

Superstar Rajinikanth Wishes PM Modi and MNM President Kamal Hassan Post Lok Sabha Elections 2019

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது.இதனை அடுத்து இன்று தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள செல்வதை உறுதிப்படுத்தினார்.மோடி நாட்டின் சிறந்த தலைவராக உருவெடுத்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

Superstar Rajinikanth Wishes PM Modi and MNM President Kamal Hassan Post Lok Sabha Elections 2019

இந்த விழாவில் வெறும் பார்வையாளனாக மட்டுமே பங்கேற்கவுள்ளதாகவும் கூட்டணி குறித்த எந்த ஒரு எண்ணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 14 மாதங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Superstar Rajinikanth Wishes PM Modi and MNM President Kamal Hassan Post Lok Sabha Elections 2019

Superstar Rajinikanth Wishes PM Modi and MNM President Kamal Hassan Post Lok Sabha Elections 2019