தனது திரைப்பயணத்தில் 170 ஆவது திரைப்படமாக நடிக்க இருக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அத்திரைப்படம் குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் அடுத்தடுத்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. முன்னதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக லால் சலாம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தலைவர் 171 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியின் தலைவர் 171 படத்தின் இதர அறிவிப்புகள் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் ரிலீசுக்கு பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது திரைப்பயணத்தின் 170 ஆவது திரைப்படமாக உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது தொடங்கி இருக்கிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இந்த தலைவர் 170 திரைப்படத்தை எழுதி இயக்குகிறார். 4வது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் கைகோர்க்கும் அனிருத் தலைவர் 170 படத்திற்கு இசை அமைக்கிறார். இதனிடையே “தலைவர் 170 ஸ்குவாட்” என்ற பெயரில் இப்படத்தில் பணியாற்றும் படக்குழுவினர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது தலைவர் 170 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து முதல் முறையாக நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை துஷாரா விஜயன் மற்றும் இறுதி சுற்று, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் ரசிகர்களை கவர்ந்த நடிகை ரித்திகா சிங் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இன்று அக்டோபர் 3ம் தேதி தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. இந்த படப்பிடிப்பிற்கு கிளம்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "தலைவர் 170 படம் ஒரு நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும்" என தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பிற்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அந்த ஸ்பெஷல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
#Thalaivar170 நல்ல கருத்துள்ள பொழுதுபோக்கு படமா இருக்கும் - #SuperstarRajinikanth 🔥@rajinikanth #TJGnanavel #Rajinikanth #Thalaivar170Team #SuperStar pic.twitter.com/DbZpyAZtgW
— Galatta Media (@galattadotcom) October 3, 2023