"அதற்காகவே அவர் மீது பெரிய மரியாதை உண்டு!"- தளபதி விஜய் குறித்து வாரிசு நடிகை சம்யுக்தா ஷண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்! வைரல் வீடியோ

தளபதி விஜய் குறித்து வாரிசு நடிகை சம்யுக்தா ஷண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்,samyuktha shan shared about thalapathy vijay galatta fans festival | Galatta

மாடலிங் துறையில் பிரபலமான சம்யுக்தா விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவிலும் களமிறங்கி இருக்கும் நடிகை சம்யுக்தா இந்த 2023 ஆம் ஆண்டில் பொங்கல் வெளியீடாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா மற்றும் ஜெய் இணைந்து நடித்த காபி வித் காதல் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களிலும் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சம்யுக்தா ஷண் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சம்யுக்தா ஷண் தனது பயணத்தின் பல சுவாரசியமான அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், தளபதி விஜய் அவர்களோடு இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் தளபதி விஜய் அவர்கள் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், “ஜாலியாக இருப்பார் அவர் எப்போதும் ஃபண்ணாக இருப்பார். எப்போதும் எல்லோரையும் ஒரே மாதிரி பார்ப்பார் அப்படி அவர் பார்க்கும் போது தான் அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை வந்தது. யாரையும் குறைத்தோ அல்லது அதிகமாகவோ இல்லாமல் எல்லோரிடமும் "ஹாய் மா எப்படி இருக்க" அந்த மாதிரி எல்லோரிடமும் அப்படித்தான் இருப்பார். இன்னொரு விஷயம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அது WORK ETHICS. பயங்கர WORKAHOLIC. பார்ப்பதற்கு செல்லாக இருப்பார் ஆனால் பயங்கரமான WORKAHOLIC எனவே அதற்காகவே எனக்கு அவர் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு என நினைக்கிறேன்.  நாம் விஜய் சாரிடம் இருந்து ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், ஒரு கரியரை தேர்ந்தெடுத்து விட்டோம் எனில் அதில் 150 சதவீதம் கொடுக்க வேண்டும் என்ன பிரச்சனை வந்தாலும் அந்த கரியர் நம்மை காப்பாற்றும். என்றார். 

தொடர்ந்து அவரிடம், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் இருந்தீர்கள் இப்போது லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுவிட்டது எங்களுக்கெல்லாம் அது மிகவும் வருத்தமாக இருக்கிறது உங்களுக்கு எப்படி? எனக் கேட்டபோது, “அப்பாடா லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது நல்ல வேலை வாரிசு இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படவில்லை” என்று சிரித்துக் கொண்டு பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம், “அடடா இந்த முறை என்ன குட்டி கதை சொல்லி இருப்பார் என்று உங்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கிறதா? எனக் கேட்டபோது, “குறிப்பாக மீடியாவின் கவரேஜ் மீம்ஸ் போன முறை எங்கள் தயாரிப்பாளரின் மீம்கள் பயங்கர ட்ரெண்டானது அதையெல்லாம் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பேன். அந்த மாதிரியான விஷயங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணுகிறேன்.” என தெரிவித்துள்ளார் இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகை சம்யுக்தாவின் முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.