"பிதாமகன்" படத்தின் தயாரிப்பாளர் VAதுரை உடல் நலக்குறைவால் திடீரென காலமானார்!

பிதாமகன் தயாரிப்பாளர் VAதுரை உடல் நலக்குறைவால் காலமானார்,pithamagan producer va durai passed away due to bad health | Galatta

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான VA.துரை தற்போது உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். பிதாமகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் VA.துரை அவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனையில் மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் மிகுந்த துயரத்தில் வாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தனது எவர் கிரீன் மூவி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சார்பில் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் VA.துரை தனது முதல் திரைப்படமாக இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் கதாநாயகனாக நடித்த என்னம்மா கண்ணு திரைப்படத்தை தயாரித்தார். தொடர்ந்து தனது 2வது படத்தில் மீண்டும் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்த தயாரிப்பாளர் VA.துரை நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்த லூட்டி திரைப்படத்தை தயாரித்தார். பின்னர் மீண்டும் இயக்குனர் சக்தி சிதம்பரம் உடன் இணைந்து நடிகர் கார்த்திக் கதாநாயகனாக நடித்த லவ்லி திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் VA.துரை அடுத்ததாக 3வது முறை மீண்டும் சத்யராஜ் உடன் இணைந்து விவரமான ஆளு திரைப்படத்தை தயாரித்தார். 

இந்த வரிசையில் தனது அடுத்த திரைப்படமாக கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படத்தை தயாரிப்பாளர் VA.துரை தயாரித்தார். பெரிதும் கவனிக்கப்பட்ட பிதாமகன் திரைப்படம் இந்திய அளவில் பலரது பாராட்டுகளை பெற்றதுடன், நடிகர் சீயான் விக்ரமுக்கு முதல் தேசிய விருதையும் பிதாமகன் படம் பெற்றுக் கொடுத்தது. அடுத்ததாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த கஜேந்திரா திரைப்படத்தை VA.துரை தயாரித்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பாபா திரைப்படத்திற்கு எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராக VA.துரை பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் திரைப்படங்களை தயாரிப்பதில் இருந்து விலகி இருந்த VA.துரை அவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருந்தார். 

தனது மருத்துவ சிகிச்சைகளுக்கான பணம் கூட இல்லாமல் மிகுந்த வேதனையில் வாடிய தயாரிப்பாளர் VA.துரை அவர்கள் வீடியோ மூலமாக தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து திரைத்துறையைச் சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் சிலரும் உதவிக்கரம் நீட்டினர். நீரிழிவு நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்த தயாரிப்பாளர் VA.துரை அவர்களுக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாக கால் ஒன்றும் அகற்றப்பட்டது. இதனை அடுத்து சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் தனது இல்லத்தில் வசித்து வந்த தயாரிப்பாளர் VA.துரை அவர்கள் தற்போது காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பல்வேறு உடல் நலக்குறைவால் மிகுந்த அவதிப்பட்டு வந்த தயாரிப்பாளர் VA.துரை நேற்று அக்டோபர் 2ம் தேதி இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு வயது 59. தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் VA.துரை அவர்களின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 
 

பிரபல தயாரிப்பாளர்
V.A.துரை காலமானார்
என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி , கஜேந்திரா, பாபா, பிதாமகன் போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் V.A.துரை 69 நேற்று (2.10.2023) இரவு 9 மணியளவில் உடல் நலம் சரியில்லாமல் வீட்டிலேயே காலமானார். pic.twitter.com/RULmH4LAuE

— producers council pr news (@TFPCprnews) October 3, 2023