"விஜய் - வெங்கட் பிரபுவின் தளபதி 68 என்ன மாதிரியான படம்?"- படக்குழு கொடுத்த அப்டேட்டால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

விஜயின் தளபதி 68 பற்றி பட குழு கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்,vijay venkat prabhu in thalapathy68 will be a high octane action film | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் தளபதி விஜயின் 68வது திரைப்படமான தளபதி 68 படம் என்ன மாதிரியான படமாக இருக்கும் என படக்குழு தரப்பில் இருந்து வெளிவந்த ஸ்பெஷல் அப்டேட் தற்போது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் அடுத்த ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த இயக்குனர்கள் லோகேஷ் தளபதி விஜய் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த லியோ படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 5ம் தேதி வெளிவர இருக்கிறது. இதனிடையே தனது 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் தளபதி விஜய் இணைந்திருக்கிறார். 

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜய் உட்பட படக்குழுவினர் அதற்காக அமெரிக்கா சென்றனர். உலகின் முன்னணி VFX நிறுவனங்களில் ஒன்றாக ஆஸ்கார் விருதுகளை வென்ற USC ICT நிறுவனத்துடன் தளபதி 68 படக்குழு கைகோர்த்துள்ளது. லைட் ஸ்டேஜ் என்ற முறையில் மேம்பட்ட மோஷன் கேப்சர் செய்யக்கூடிய உயர்தர VFX பணிகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 படக்குழு தற்போது USC ICT நிறுவனத்துடன் இணைந்துள்ளது. எனவே தளபதி 68 திரைப்படத்தில் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான சர்ப்ரைஸ்  ட்ரீட் காத்திருப்பதாக தெரிகிறது. இதனிடையே நேற்று அக்டோபர் 2ம் தேதி பூஜை உடன் தளபதி 68 திரைப்படம் தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு தேவையான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் தற்போது மொத்த கவனமும் லியோ படத்திற்கு இருக்க வேண்டும் என முடிவு செய்த தளபதி 68 பட குழுவினர் இதர அறிவிப்புகள் அனைத்தையும் லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியிட முடிவு செய்துள்ளனர் 

தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பிரபுதேவா, டாப் ஸ்டார் பிரசாந்த், மோகன், ஜெயராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கதாநாயகிகளாக மீனாக்ஷி சௌத்ரி, பிரியங்கா அருள் மோகன் இணைந்து இருப்பதாகவும் சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவராததால் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தற்போது பட பூஜை புகைப்படங்கள் மற்றும் இதர அப்டேட்டுகள் அனைத்தும் லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளிவரும் என இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்து இருக்கிறார்.  இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து தளபதி 68 படம் தொடங்கப்பட்டிருப்பதாக வெளிவந்த அறிவிப்பில் இத்திரைப்படம் "ஒரு விறுவிறுப்பான அதிரடி ஆக்சன் படமாக இருக்கும்" என தெரிவிக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதர அறிவிப்புகளுக்காக லியோ ரிலீஸ் வரை காத்திருப்போம்.
pithamagan producer va durai passed away due to bad health