தலைவர் 170: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செம மாஸான புது லுக்... ஷூட்டிங் அறிவிப்புடன் வந்த அட்டகாசமான GLIMPSE இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 பட லுக் வெளியானது,superstar rajinikanth new look for thalaivar170 movie revealed | Galatta

அதிரடியாக ஆரம்பமாகி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புடன் ரஜினிகாந்தின் புதிய லுக்கின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இது குறித்த இதர அறிவிப்புகள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து அடுத்த சில தினங்களில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது லால் சலாம் திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் வருவதற்காக நடைபெற்று வருகின்றன 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக லால் சலாம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே தனது திரைப் பயணத்தில் 170 ஆவது திரைப்படமாக உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவனம் செலுத்தி வருகிறார். மஞ்சு வாரியர் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து கதையின் நாயகியாக நடிக்கும் இந்த தலைவர் 120 திரைப்படத்தில் ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்திய சினிமாவின் மோஸ்ட் ஃபேவரட் இசையமைப்பாளராக உயர்ந்து வரும் ராக் ஸ்டார் அனிருத் பேட்டை தர்பார் மற்றும் ஜெயிலர் படங்களை தொடர்ந்து 4வது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் தொடங்கி இருக்கிறது இதற்காக நேற்று அக்டோபர் 3ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார் முன்னதாக புறப்படுவதற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 170 திரைப்படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 திரைப்படத்திற்கான பிரத்தியேகமான புதிய லுக்கை அறிமுகம் செய்யும் வகையில் புதிய மாஸான புகைப்படத்தை வெளியிட்ட படக்குழுவினர், "லைட்ஸ்... கேமரா... கிளாப்... ஆக்சன்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அட்டகாசமான நடிகர்களோடு தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தலைவர் விருந்தை நீங்கள் என்ஜாய் செய்திருப்பீர்கள் என நம்புகிறோம். இப்போது ஆக்சனுக்கான நேரம்... படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இதர அறிவிப்புகளோடு வருவோம்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 பட செம்ம ஸ்டைலான பக்கா மாஸ் லுக் இதோ...
 

Lights ☀️ Camera 📽️ Clap 🎬 & ACTION 💥

With our Superstar @rajinikanth 🌟 and the stellar cast of #Thalaivar170🕴🏼 the team is all fired up and ready to roll! 📽️

Hope you all enjoyed the #ThalaivarFeast 🍛 Now it's time for some action! We'll come up with more updates as the… pic.twitter.com/gPUXsPmvEQ

— Lyca Productions (@LycaProductions) October 4, 2023