அறிவித்த நாளுக்கு முன்பே வெளிவரும் விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப்பின் மெர்ரி கிறிஸ்மஸ்! புதிய ரிலீஸ் தேதி இதோ

விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப்பின் மெர்ரி கிறிஸ்மஸ் பட புது ரிலீஸ் தேதி அறிவிப்பு,vijay sethupathi in merry christmas gets new release date | Galatta

தனக்கென தனி பாணியில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதை வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் ஹிந்தி மற்றும் தமிழன இரு மொழிகளில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடித்திருக்கும் மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்பே வெளிவரும் என புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது , இயக்குனர் அட்லீயின் முதல் பாலிவுட் படமாக ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து பாக்ஸ் ஆபீஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் ஜவான் படத்திலும் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இதுவரை இந்த 2023 ஆம் ஆண்டில் வெளிவந்த மைக்கெல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மும்பைக்கர் ( மாநகரம் ஹிந்தி ரீமேக்), விடுதலை பாகம் 1 ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுபதி  நடிப்பில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வெளிவருகின்றன. 

அந்த வகையில் விடுதலை பாகம் 1 படத்தை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி உடன் இணைந்து பெருமாள் வாத்தியார் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை பாகம் 2 திரைப்படம் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்ததாக தேசிய விருது பெற்ற "காக்கா முட்டை" இயக்குனர் மணிகண்டன் உடன் கடைசி விவசாயி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் மக்கள் செல்வன் புதிய தமிழ் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் தனது 50வது திரைப்படமாக குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகும் மகாராஜா திரைப்படத்திலும் தற்போது நடித்து வரும் விஜய் சேதுபதி காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பிசாசு 2 படத்திலும் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2018ல் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமாருடன் மீண்டும் இணைந்த இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் ஏஜென்ட் வினோத், பட்லாபூர், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் தான் மெர்ரி கிறிஸ்மஸ். ஹிந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகி வெளிவரும் மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், சண்முகராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். முன்னதாக இந்த திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரம் முன்பாக டிசம்பர் 8ம் தேதியே வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு இதோ...
 

Christmas comes even earlier this year!! Be ready to feel the chills and thrills of #SriramRaghavan's #MerryChristmas, now on 8th December, in cinema halls near you.@TipsFilmsInd #MatchboxPictures @RameshTaurani #SanjayRoutray #JayaTaurani #KewalGarg #KatrinaKaif #SanjayKapoorpic.twitter.com/PHp65E9KPx

— VijaySethupathi (@VijaySethuOffl) October 3, 2023