தலைவர் 170: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் 32 ஆண்டுகளுக்குப் பின் இணையும் பெரிய படம்! அதிரடியான அறிவிப்பு

32 ஆண்டுகளுக்குப் பின் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன்,rajinikanth amitabh bachchan in thalaivar170 film after 32 years | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளோடு ஆரம்பமாகி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 திரைப்படத்தில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவரோடு இணைந்து பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகரான அமிதாப் பச்சன் நடிக்கிறார். அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் கிட்டத்தட்ட தனது திரைபயணத்தில் 47 ஆண்டுகளைக் கடந்த போதும் இன்றும் உச்ச நட்சத்திர நாயகராகவும் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ஜெயலலிதா திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக 600 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்கள் கொடுக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் இயக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

அதில் முதலாவதாக கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "மொய்தின் பாய்" என்ற மிக முக்கிய கவுரவ வேடத்தில் நடித்திருக்கும் லால் கலாம் திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக தனது திரை பயணத்தில் 171-வது திரைப்படமாக உருவாகும் தலைவர் 171 திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனிடையே தனது 170 ஆவது திரைப்படமான தலைவர் 170 திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் TJ.ஞானவேல் உடன் இணைந்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார். முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் மஞ்சு வாரியர் இணைந்து இருக்கும் இந்த தலைவர் 170 திரைப்படத்தில் தென்னிந்திய திரை உலகின் மிக முக்கிய நடிகர் நடிகைகளான ஃபகத் ஃபாஸில் , ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளரான ராக் ஸ்டார் அனிருத், பேட்ட, தர்பார், ஜெயிலர் வரிசையில் 4வது படமாக தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இசையமைக்கிறார்.  இன்று அக்டோபர் 3ம் தேதி திருவனந்தபுரத்தில் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், “இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நாயகராக விளங்கும் அமிதாப் பச்சன் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சினிமாவின் இருவரும் நட்சத்திரங்களாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் கடந்த 1991 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த "ஹம்" என்ற படத்தில் கடைசியாக இணைந்து நடித்த நிலையில், தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் 170 திரைப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமான இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
 

Welcoming the Shahenshah of Indian cinema ✨ Mr. Amitabh Bachchan on board for #Thalaivar170🕴🏼#Thalaivar170Team reaches new heights with the towering talent of the one & only 🔥 @SrBachchan 🎬🌟😍@rajinikanth @tjgnan @anirudhofficial #FahadhFaasil @RanaDaggubatipic.twitter.com/BZczZgqJpm

— Lyca Productions (@LycaProductions) October 3, 2023