தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட ட்ரெய்லர் ரிலீஸில் கூடுதல் ஸ்பெஷல்... சர்ப்ரைஸாக வந்த மிரட்டலான புது போஸ்டர் இதோ!

தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லர் சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகும்,thalapathy vijay in leo movie trailer on sun tv youtube channel | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த ஸ்பெஷல் அப்டேட் உடன் மிரட்டலான புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக விளங்கும் தளபதி விஜய் அடுத்ததாக தனது திரை பயணத்தில் 68வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கிறார். விறுவிறுப்பான ஆக்சன் படமாக உருவாகும் தளபதி 68 படம் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டிருக்கிறது. இதர அறிவிப்புகள் தளபதி விஜயின் 67 ஆவது படமான லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்திய திரைப்படங்களில் ஒன்றாக நாளுக்கு நாள் ரசிகர்களிடையே எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் தான் தளபதி விஜயின் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பதாலும், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 500 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்ததாலும் ஆரம்பம் முதலில் லியோ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பின. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா, தளபதி விஜய் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருக்கும் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில் வெளிவரும் லியோ படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களின் மிரட்டலான ஆக்ஷனில் அதிரடியான படமாக வெளிவரும் லியோ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் "கழுதைப்புலி சண்டைக்காட்சி" பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மிரட்டலான சண்டை காட்சிக்காகவே ஸ்பெஷலான VFX பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகிற அக்டோபர் 5ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரம்மாண்டமாக நடைபெற இருந்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், அதன் கூடுதல் அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. தளபதி விஜயின் மிரட்டலான லியோ படத்தின் ட்ரெய்லர் சன் டிவியின் Youtube சேனலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அறிவிக்கும் வகையில் அதிரடியான புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. அந்த புதிய போஸ்டர் இதோ...
 

Locked and loaded! 🔥💥

Unleashing the #LeoTrailer on Oct 5th only on Sun TV YouTube channelhttps://t.co/1lU7vCb2go#Thalapathy @actorvijay @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #Leo pic.twitter.com/MmZBswsUBv

— Sun TV (@SunTV) October 3, 2023