'பிறக்கும்போதே இதயத்தில் 2 ஓட்டைகள்!'- செல்ல மகளின் அறுவை சிகிச்சை பற்றி எமோஷனலான 'சச்சின்' பட நடிகை பிபாஷா பாசு!

மகளின் இதய அறுவை சிகிச்சை பற்றி பேசிய சச்சின் பட நடிகை பிபாஷா பாசு,sachein actress bipasha basu daughter went to open heart surgery | Galatta

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை பிபாஷா பாசு தனது செல்ல மகளுக்கு பிறந்த போதே இருதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருந்ததாகவும் மேற்கொண்டு அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் மிகவும் எமோஷனலாக பகிர்ந்து கொண்டார். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த அஜ்னபீ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமான நடிகை பிபாஷா பாசு, தொடர்ந்து ஹிந்தி திரை உலகில் அடுத்தடுத்து அட்டகாசமான பல படங்களில் நடித்து நட்சத்திர நாயகியாக திகழ்ந்தவர். தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை பிபாஷா பாசு தூம்-2, ரேஸ், பிளேயர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையேவும் கவனம் ஈர்த்தவர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நடிப்பில் வெளிவந்த அலோன் திரைப்படத்தில் இணைந்து நடித்த சக நடிகர் கரண் சிங் குரோவரை, நடிகை பிபாஷா பாசு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடிகர் கரண் சிங் குரோவர் - நடிகை பிபாஷா பாசு தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தங்களது செல்ல மகளுக்கு தேவி என பெயரிட்டனர். இந்த நிலையில் தனது செல்ல மகளுக்கு பிறந்த போதே ஏற்பட்ட உடல் நலக் குறைவு குறித்து நடிகை பிபாஷா பாசு சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். இன்ஸ்டாகிராம் லைவில் நடிகை நேஹா தூபியாவோடு பேசிய இப்போது நடிகை பிபாஷா பாசு இதனை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், 

“எனது செல்ல மகள் தேவிக்கு பிறக்கும் போதே இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருந்தன. பின்னர் அந்த இரண்டு ஓட்டைகள் தானாக சரியாகறதா என்பதை கண்டறிய மருத்துவர்கள் அவ்வப்போது ஸ்கேன் செய்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த இரண்டு ஓட்டைகள் பெரிதாக இருந்ததால் அது தானாக சரியாகவில்லை. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர். பிறந்து மூன்று மாதங்களே ஆன ஒரு குழந்தைக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்வது என்பது மிகவும் ரிஸ்க்கான காரியம் தான். ஆனாலும் அவளது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்காக நாங்கள் சம்மதித்தோம். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆபரேஷன் தியேட்டருக்கு முன் நின்று கொண்டிருந்தேன். அந்த ஆறு மணி நேரம் என் வாழ்க்கையை நின்று விட்டது போல தான் இருந்தது பின்னர் ஒரு வழியாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. தற்போது எனது மகள் தேவி மிகவும் நலமாக இருக்கிறாள்.” என நடிகை பிபாஷா பாசு மிகவும் எமோஷனலாக தெரிவித்திருக்கிறார். நடிகை பிபாஷா பாசுவின் இந்த எமோஷனலான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டி இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Bipasha Basu (@bipashabasu)