ஷாரூக் கான் - நயன்தாராவின் ஜவான் பட ரொமான்டிக் ட்ரீட்... ரசிகர்களை கவர்ந்த ஹயோடா பாடல் வீடியோ இதோ!

ஷாரூக் கான் - நயன்தாராவின் ஜவான் பட ஹயோடா பாடல் வீடியோ வெளியீடு,shah rukh khan in jawan movie hayyoda song video out now | Galatta

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் - நயன்தாரா இணைந்து நடித்துள்ள ஜவான் படத்தில் இருந்து அடுத்த பாடலாக வரும் ஹயோடா பாடல் வீடியோ வெளியானது. உலக அளவில் பல கோடி ரசிகர்களைக் கொண்ட இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ஷாரூக் கான். கடைசியாக ஷாரூக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாரூக் கான் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகும் டங்கி திரைப்படத்தில் தற்போது ஷாரூக் கான் நடித்து வருகிறார். மேலும் சல்மான் கான் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் டைகர் 3 படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் ஷாரூக் கான் நடிக்க இருக்கிறார். 

இந்த வரிசையில் ஷாருக் கான் நடிப்பில் அடுத்த அதிரடி படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் ஜவான். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக வரும் செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது. 

முன்னதாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லராக கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ஜவான் திரைப்படத்தின் அதிரடியான PREVUE வீடியோ மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலாக வந்த "வந்த எடம்" பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த "வந்த எடம்" பாடலுக்கு ஆயிரம் பெண் டான்ஸர்களுடன் இணைந்து ஷாருக் கான் நடனமாடியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஜவான் திரைப்படத்தின் அடுத்த பாடலாக ஹயோடா பாடல் வெளியானது. அனிருத்தினின் துள்ளலான இசையில் ஷாரூக் கான் - நயன்தாராவின் ரொமான்டிக் பாடலாக தயாராகியிருக்கும் இந்த ஹயோடா பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது. அட்டகாசமான அந்த ஹயோடா பாடல் வீடியோ இதோ…