4 வருட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வரும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,Anushka in miss shetty mr polishetty movie new release date announced | Galatta

நடிகை அனுஷ்கா நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தென்னிந்திய சினிமாவின் நட்சத்திரம் நாயகியாகவும் இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகையாகவும் திகழும் நடிகை அனுஷ்கா கடைசியாக நடித்த பாகமதி திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீசானது. இதனைத் தொடர்ந்து மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த நிசப்தம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு  நடிகை அனுஷ்கா நடிப்பில் அடுத்த வெளிவர தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் தான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது திரைக்கு வர தயாராகி வரும் இந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படம் தனது திரைப்பயணத்தில் 48வது படமாகும். இயக்குனர் மகேஷ் பாபு.P இயக்கத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா மற்றும் ஜாதி ரத்தினலு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் நவீன் பொலி ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்திற்கு கோட்டாகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். UV CREATIONS மற்றும் STUDIO GREEN ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்க பக்கா கமெடி என்டர்டெய்னராக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெளிவரவுள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக சில தினங்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதமாவதால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனராக திகழ்ந்த இயக்குனர் அட்லியின் முதல் பாலிவுட் படமாக ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்க, உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படமும் அதே செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஷாருக் கான் மற்றும் அனுஷ்காவின் ட்ரீட்டாக ஜவான் மற்றும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர். அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி பட புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ…
 

Miss Shetty and Mr. Polishetty are ready to butter you up on Janmashtami! #MissShettyMrPolishetty are all set to entertain you all starting from September 7th in theaters! 🥳#MSMPonSep7th @MsAnushkaShetty @NaveenPolishety @filmymahesh @radhanmusic #NiravShah pic.twitter.com/WZ4lGoKg6a

— UV Creations (@UV_Creations) August 14, 2023