ஜெயிலர் மெகா பிளாக்பஸ்டர்... இமயமலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகப் பயணம்! வைரலாகும் புகைப்படங்கள் & வீடியோ இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆன்மீகப் பயண புகைப்படங்கள் & வீடியோ,superstar rajinikanth at yogatha satsang ashram in ranchi | Galatta

ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பட குழுவினர் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலையில் தனது ஆன்மீகப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கத் தவறிய நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஜெயிலர் திரைப்படத்திற்காக காத்திருந்தனர்.  முதல்முறையாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகி உலகெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி இருக்கும் அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படம் முழுக்க ரசிகர்களை பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஆக்ரோஷப்படுத்துகிறது
 
முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் கிரிக்கெட்டை மையப்படுத்திய லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருக்கிறார். அடுத்ததாக லைகா ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அறிவிப்புகளுக்காக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே தற்போது ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியான முதல் வாரத்திலேயே 375.40 கோடி ரூபாய் ஜெயிலர் திரைப்படம் வசூலித்திருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் பெரிய சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு இடையே ஜெயிலர் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றை நடத்தி ரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

ஆனால் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படம் பார்த்துவிட்டு தனது இமயமலை ஆன்மீக பயணத்தை தொடங்கினார். 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இமய மலைக்கு ஆன்மீக பயணம் சென்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அந்த பயணத்தின் புகைப்படங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ராஞ்சியில் அமைந்திருக்கும் யோகதா சத்சங்க ஆசிரமத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை புரிந்த வீடியோவும் புகைப்படங்களும் தற்போது வெளிவந்திருக்கின்றன. அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இதோ…
 

ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் தலைவர்...#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #தலைவர் 🤘 @rajinikanth #BinaryPost pic.twitter.com/ECf5DifUki

— Binary Post (@BinaryPost001) August 18, 2023
 

தலைவர்...#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #தலைவர் 🤘 @rajinikanth #BinaryPost pic.twitter.com/hfJgQTuSQz

— Binary Post (@BinaryPost001) August 18, 2023

ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் தலைவர்...#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #தலைவர் 🤘 @rajinikanth #BinaryPost pic.twitter.com/eDKuhY4Fgw

— Binary Post (@BinaryPost001) August 18, 2023