‘உள்ள வந்து நம்மள பிளாக்மெயில் பண்ணுவாரு!’- ரெடின் கிங்ஸ்லி பற்றி ஜெயிலர் பட விழாவில் பேசிய நெல்சன்! கலகலப்பான வீடியோ இதோ

ரெடின் கிங்ஸ்லி பற்றி ஜெயிலர் பட விழாவில் பேசிய நெல்சன்,nelson about relationship with redin kingsley in jailer thanks meet | Galatta

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி அடுத்தடுத்து டாக்டர் & பீஸ்ட் என தனக்கென தனி ஸ்டைலில் பக்கா டார்க் காமெடி ஆக்சன் என்டர்டெய்னர் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அடுத்த சூப்பர் என்டர்டெய்னராக வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்த ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதையின் நாயகனாக நடிக்க, மலையாள நடிகர் விநாயகன் மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்ணா மேனன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஜாஃபர் சாதிக், சரவணன் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவில் இருந்து சுனில், மலையாள சினிமாவில் இருந்து மோகன்லால், கன்னட சினிமாவிலிருந்து சிவராஜ்குமார் மற்றும் ஹிந்தி சினிமாவில் இருந்து ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்தனர். 

அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் நல்ல என்டர்டெய்னிங் திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. ரிலீஸான முதல் நான்கு நாட்களிலேயே வெளிநாடுகளில் மட்டும் 105 கோடிகளுக்கும் மேல் வசூலித்த ஜெயிலர் திரைப்படம் முதல் வார இறுதியில் வெறும் உலக அளவில் 375.40 கோடி வசூலித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஏழு நாட்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை தற்போது ஜெயிலர் திரைப்படம் எட்டி இருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் திரைப்படத்தின் படக்குழு ஒரு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் நெல்சன், நடிகர் ரெடின் கிங்ஸ்லி குறித்து பேசினார். அப்படி பேசுகையில்,

“என்ன ரெடின் ஷூட் முடிச்சுட்டு வரீங்களா?.”  என ரெட்டின் கிங்ஸ்லி பற்றி பேச தொடங்கிய இயக்குனர் நெல்சன், “நன்றி ரெட்டின் முதல் படத்திலிருந்து என்னுடன் இருக்கிறீர்கள்… முதல் படத்தில் தன்ராஜ் மாதிரி தான் வந்தார், இப்போது பார்த்தால் வேறு மாதிரி வந்திருக்கிறார். என்னவென்றால் இப்போது தெரியும் அவருடைய வளர்ச்சி என்னவென்று, ரொம்ப பிசியாக இருந்தாலுமே நாம் எப்போது டேட் கொடுத்தாலும் பழைய சென்டிமென்ட்கள் எல்லாம் சொல்லி பிளாக் மெயில் பண்ணி வர வைத்து விடுவேன். அவர் உள்ளே வந்த பிறகு நம்மள பிளாக்மெயில் பண்ணுவார். நமக்கு தெரியும் அவர் நிறைய பிசியாக இருக்கிறார் இருந்தாலும் நாம் என்ன சொல்கிறோமோ அதை கேட்டு கம்ஃபர்டபிளாக பண்ணி கொடுப்பார். எனக்கும் அவருக்கும் ஒரு வைப் இருக்கிறது. அதை அவர் தான் உருவாக்கினார். அதற்கேற்ற மாதிரி நாம் என்ன படம் பண்ணாலும் ஒரு சப்போர்ட்டாக எப்போதுமே இருப்பார். நடிப்பதைத் தாண்டி டிஸ்கஷன் சமயத்திலும் வருவார் ஏதாவது தேவையில்லாததை சொல்லுவார். அவர் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அதற்கு ஒரு சண்டை போட்டுவிட்டு போவது அதன் பிறகு அவரை நாம் சமாதானப்படுத்துவது என போய்க்கொண்டே இருக்கும் நன்றி நன்றி உங்களுடைய ஆதரவுக்கு நன்றி ரெடின்" என தெரிவித்துள்ளார். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.