"வால்யூம் ஏத்துங்க... தளபதிய கொண்டாடுங்க!"- ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த விஜயின் வாரிசு பட OST டிராக்குகளை வெளியிட்ட தமன்!

தளபதி விஜயின் வாரிசு பட OST ட்ராக்கள் வெளியானது,thalapathy vijay in varisu movie ost tracks out now | Galatta

தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வாரிசு திரைப்படத்தின் OST டிராகுக்களை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர எடுக்கும் திரைப்படம் லியோ எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணி இணைந்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜய் நடிப்பில் ரிலீசான திரைப்படம் வாரிசு. முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க, பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடிய வாரிசு படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார்.

முன்னதாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் OST ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேட்டபோது, OST ட்ராக்குகளை கடந்த ஜூலை மாதத்திற்குள் வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி OST ட்ராக்குகள் வெளிவராததால் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார். பின் ஆகஸ்ட் 17ம் தேதி OST ட்ராக்குகள் வெளியாகும் எனவும் இதில் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா சர்ப்ரைஸாக ஒரு புதிய டிராக்கையும் இணைத்திருப்பதாகவும் மொத்தம் 22 டிராக்குகள் இருப்பதாக தெரிவித்தார் தமன். அதன்படி வேடர்கள், தலைவன், அதிர்வு, அம்மாவின் தாலாட்டு, ஆமி ஆமி ரீமிக்ஸ், அதே நிலா, காவலன், ஏக்கம், ரத்தம், பாஸ் ரிட்டன்ஸ், காலம், ஆட்டநாயகன், பகை, தர்மயுத்தம், துருப்பு, திருப்பி கொடுக்கும் நேரம், தளபதீ, உறவு, ரஞ்சிதம், அப்பாவின் ஆசை, அம்மாவின் ஆசை, முதல் நாயகன் என 22 OST டிராக்குகள் இந்த வாரிசு OSTல் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், "வாழும் ஏத்துங்க... தளபதிய கொண்டாடுங்க!" என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த விஜயின் வாரிசு பட OST டிராக்குகளை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டார். அட்டகாசமான வாரிசு OST இதோ…