சந்தானத்தின் அடுத்த பக்கா காமெடி என்டர்டெய்னர் ON THE WAY... கிக் படத்தின் கலகலப்பான ரிலீஸ் ட்ரெய்லர் இதோ!

சந்தானத்தின் கிக் படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது,santhanam in kick movie release trailer out now | Galatta

நடிகர் சந்தானத்தின் அடுத்த கலக்கல் காமெடி என்டர்டைனராக வர இருக்கும் கிக் திரைப்படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது. தனக்கென தனி ஸ்டைலில் அட்டகாசமான கவுண்ட்டர் காமெடிகள் மூலம் மக்கள் மனதை வென்ற முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து காமெடியனாக கலக்கிய நடிகர் சந்தானம்  கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து  ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திலிருந்து கதாநாயகனாக தனது புதிய பாதையை தொடங்கிய சந்தானம் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குளுகுளு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் என வரிசையாக கலக்கலான படங்களை கொடுத்து வருகிறார்.இந்த வரிசையில் கடைசியாக சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பக்கா ஹாரர் காமெடி ட்ரீட்டாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சந்தானத்தின் முந்தைய ஹாரர் காமெடி திரைப்படங்களான தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களில் வரிசையில் வெளிவந்த இந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 

அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு தயாராகி வரும் மற்றொரு நகைச்சுவை படமான இந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் வீர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சந்தானம் நடிப்பில் அடுத்த காமெடி சரவெடியாக வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் தான் கிக். பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிக் திரைப்படம் சந்தானத்தின் திரைப்பயணத்தில் ஹீரோவாக 15வது திரைப்படமாகும். கிக் திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து தன்யா போப் கதாநாயகியாக நடிக்க, தம்பி ராமையா, ராகினி திவேதி, கோவை சரளா, ப்ரம்மானந்தம், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில் தயாரித்துள்ள கிக் திரைப்படத்திற்கு, சுதாகர்.S.ராஜ் ஒளிப்பதிவில், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்ய அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பே கிக் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. தொடர்ந்து தற்சமயம் கிக் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகினறன. சந்தானத்தின் பக்கா காமெடி என்டர்டெய்னராக கிக் திரைப்படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கிக் திரைப்படத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கிக் திரைப்படத்தின் கலகலப்பான புதிய ரிலீஸ் ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். கலக்கலான அந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.