பேட்ட படத்தின் ரன் டைம் குறித்த தகவல் !
By Sakthi Priyan | Galatta | December 24, 2018 16:53 PM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது. பேட்ட படத்தின் ட்ரைலர் 2019 புத்தாண்டு அன்று மாலை வரும் என்று பேசப்பட்டு வருகிறது.
தற்போது இப்படத்தின் ஓட்ட நேரம் அதாவது ரன் டைம் 2 மணி நேரம் 51 நிமிடங்கள் என்ற செய்தி தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் படத்தில் இருக்கும் வன்முறை தொடர்பான ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.