கமர்ஷியல் கிங் என கருதப்படும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம் மீண்டும் ரிலீஸாகிறது.   

Super Star Rajinikanth Movie Muthu To Be Screened On November 23rd In Tokyo

தமிழகம் தாண்டி உலகளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக ஜப்பான் நாட்டில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் என்று கூறுவதை விட ரஜினி பக்தர்கள் என்றே கூறலாம் அந்த அளவிற்கு ரஜினிகாந்தின் ரசிகர் படை அங்கு அதிகம். 

குதிரை வண்டி ஓட்டும் நபராக முத்து என்ற பாத்திரத்தில் நடிகை மீனாவுடன் அசத்தியிருப்பார் ரஜினி. இரண்டு வேடங்களில் தோன்றி தனது நடிப்பின் பரிமானத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

பொன்னம்பலம், ராதா ரவி, சரத் பாபு போன்றோர் இப்படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்திருப்பர்.   இன்றளவும் பேசக்கூடிய மெகா ஹிட் பாடல்கள் நிறைந்த இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார்.

தற்போது 4K resolution-ல் வெளியாகும் இப்படம் வரும் நவம்பர் 23-ஆம் தேதி டோக்கியோ நகரத்தில் வெளியாகும் என்று கவிதாலயா ப்ரோடுக்ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கின்றனர்.