'லியோ பட காஷ்மீர் ஷூட்டிங்கில் ஓநாய்களோடு சண்டை!'- ஜீவி பிரகாஷின் கலகலப்பான 'அடியே' பட ஸ்பெஷல் பேட்டி!

லியோ படம் பற்றி பேசிய ஜீவி பிரகாஷின் சிறப்பு பேட்டி,gv prakash fun filled interview about leo multiverse adiyae | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை அமைப்பாளர்களில் ஒருவராக பல சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருபவர் ஜீவி பிரகாஷ் குமார்.  இசையமைப்பாளராக மட்டுமல்லாயல் நடிகராகவும் ஜிவி பிரகாஷ் குமார் தொடர்ச்சியாக பல படங்களில் அசத்தி வருகிறார். அந்த வகையில், இடிமுழக்கம், 13, கள்வன், டியர், ரெபல் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் ஏண்டா தலையில எண்ண வைக்கல மற்றும் திட்டம் இரண்டு ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் விக்னேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்து வரும் புதிய திரைப்படம் தான் அடியே. ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகை கௌரி கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் அடியே திரைப்படத்தில் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர். மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வித்தியாசமான மல்டிவெர்ஸ் கான்செப்டில் பக்கா என்டர்டைனிங் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த அடியே திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவில், முத்தையன்.U படத்தொகுப்பு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி அடியே திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் நம்மோடு கலகலப்பாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் மல்டிவெர்ஸ் பாணியில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்தார். அப்படிப் பேசும்போது இந்த மல்டிவெர்சில் லியோ படத்தில் தளபதி விஜயாக ஜீவி பிரகாஷ் குமார் இருக்கும் புகைப்படம் ஒன்றை கொடுத்து கேள்விகள் கேட்கப்பட்டது. இவை அனைத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார், தளபதி விஜயாகவே பதில் அளித்தார்.

 “வேறு ஒரு உலகத்தில் லியோ படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள்?” எனக் கேட்டபோது, “நாமே மல்டிவர்ஸ் படம் தான் எடுக்கிறோம் அவரே ஒரு மல்டிவர்ஸ் வேறு வைத்திருப்பார்.” என்றார். தொடர்ந்து அவரிடம், “காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து சொல்லுங்கள்” என கேட்டபோது, “ஒன்றுமில்லை காஷ்மீரில் நிறைய ஓநாய்கள் எல்லாம் சுற்றிக் கொண்டிருந்தன. அந்த ஓநாய்களோடு சண்டை போட்டு வருவதற்கு கொஞ்சம் நேரமாகிவிட்டது. ரொம்ப கடினமாக இருந்தது அந்த ஓநாய்கள் எல்லாம் எகிறி வரும்போது அவற்றோடு சண்டை போடுவது மிகவும் கடினமாக இருந்தது.” என்றார். தொடர்ந்து, “இந்த படத்தில் நீங்கள் ஹீரோவா வில்லனா?” என கேட்டபோது, "ஹீரோயிக் வில்லன்" என்றார். "த்ரிஷா மேடம் உடன் இணைந்து இருக்கிறீர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு அது எப்படி இருந்தது?" எனக் கேட்டபோது, “ஆமாம் ரொம்ப நாட்கள் கழித்து பார்த்தோம் ஒரு நாஸ்ட்லஜிக்காக இருந்தது எப்படி இருக்கிறீர்கள் நன்றாக இருக்கிறீர்களா என கேட்டு அது ஒரு மாதிரி நாஸ்ட்லஜிக்காக இருந்தது” என்றார். தொடர்ந்து, “அடுத்தடுத்து ப்ரோமோ வீடியோக்கள் வந்தன நீங்கள் நீங்கள் சஞ்சய் தத் சாருடன் வருவீர்களா இல்லை அவரையே எதிர்ப்பீர்களா? என கேட்டபோது, “எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட்டால் நீ காசு கொடுத்து படம் பார்க்கமாட்டாயா?” என்றார். தொடர்ந்து, “லோகேஷ் கனகராஜ் அவர்களை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்.. இசை வெளியீட்டு விழாக்களில் அவரை கலாய்த்து விடுகிறீர்களே..” எனக் கேட்டபோது, “மிகவும் இனிமையான மனிதர் கலாய்த்தால் கோச்சுக்க மாட்டார்” என்ன பதிலளித்தார். தொடர்ந்து கலகலப்பாக நகர்ந்த இந்த சிறப்பு நேர்காணல் இதோ…