உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கம்! வீடியோ உள்ளே

உபி முதல்வர் காலில் விழுந்தது குறித்து ரஜினிகாந்த் விளக்கம்,Super star rajinikanth first statement about touching yogi adityanath feet | Galatta

உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கம் அளித்து இருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கும் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. முதல்முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்க ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மோகன்லால், சுனில் வர்மா, சிவ ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கியமான கௌரவ வேடங்களில் நடித்திருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக தயாராகி இருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தனது இசையால் இன்னும் அதிரடி சேர்த்து இருக்கிறார். ரிலீசான ஒரே வாரத்தில் ஜெயிலர் திரைப்படம் 375.40 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் நிலையில் , தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்கள் படையெடுத்து வருவதால் நிச்சயமாக பாக்ஸ் ஆபீஸில் ஜெயிலர் புதிய உச்சத்தை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முன்னதாக ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு தனது ஆன்மீகப் பயணத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தனது இமயமலை பயணத்தை தொடங்கினார்.

அந்த வகையில் ராஞ்சியில் அமைந்திருக்கும் யோகதா சத்சங்க ஆசிரமத்திற்கு சென்று அங்கு இருக்கும் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி உத்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆனந்திபெண் பட்டேல் அவர்களை லக்னோவில் இருக்கும் ராஜ் பவனில் சந்தித்தார். தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதியநாத்தை சந்தித்து அவருடன் ஜெயிலர் படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தியாவின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றான அயோத்தியாவை பார்வையிட்டார். முன்னதாக யோகி ஆதித்யநாத்தை சந்தித்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து வணங்கியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. 72 வயதாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 51 வயதாகும் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுவதா? என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பு விமர்சனங்கள் வெடித்தன. 

இந்த நிலையில் தற்போது சென்னை திரும்பி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார். யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “பொதுவாகவே சன்னியாசிகள் யோகிகள், வயதில் சிறியவர்களாக இருந்தாலும் கூட அவர்களது காலில் விழுவது என்பது பழக்கம் அதை தான் செய்தேன்.” என தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதில் அளித்திருக்கிறார். தனது ஆன்மீகப் பயணம் முடித்து சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்திர பிரதேச முதல்வர் காலில் விழுந்தது குறித்து பதிலளித்த அந்த வீடியோ இதோ…
 

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது குறித்த கேள்விக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கம்!#Rajinikanth #YogiAdityanath #Jailer #UttarPradesh #SuperStarRajinikanth𓃵 #Galatta pic.twitter.com/mJcYUMsRjI

— Galatta Media (@galattadotcom) August 21, 2023