சூர்யாவின் மிரட்டலான SIX PACK லுக்... கங்குவா படக்குழு கொடுத்த மிரள வைக்கும் சர்ப்ரைஸ் புகைப்படம் இதோ!

கங்குவா படக்குழு வெளியிட்ட சூர்யாவின் மிரட்டலான புகைப்படம்,suriya new six pack work out photo released by kanguva crew | Galatta

பிரம்மாண்டமாக தயாராகி வரும் கங்குவா திரைப்படத்திற்காக மிரட்டலான சிக்ஸ் பேக் லுக்கில் சூர்யா தயாராகும் புதிய புகைப்படத்தை கங்குவா பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா முன்னதாக தனது நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்று தேசிய விருதுகளை வென்று குவித்த சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படத்தில் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக முதல்முறையாக இயக்குனர் வெற்றிமாறன் உடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில் , விரைவில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே தனது திரை பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக தற்போது சூர்யா நடித்து வரும் படம் தான் கங்குவா. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கங்குவா திரைப்படம் நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட படைப்பாக மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிற கங்குவா திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். மிரள வைக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி கதாநாயகியாக நடிக்கிறார். மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.  ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் கங்குவா திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் K.ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் முதல் GLIMPSE வீடியோவை நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக ஜூலை 23ம் தேதி சரியாக 12.01 மணிக்கு வெளிவந்தது. இதில் இடம் பெற்ற சூர்யாவின் அட்டகாசமான தோற்றமும் கங்குவா படத்தின் பிரம்மாண்டமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்காக உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சூர்யா சிக்ஸ் பேக் வைத்திருக்கும் புதிய ஒர்க் அவுட் புகைப்படத்தை கங்குவா பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சோசியல் மீடியாவை அதிரவைத்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் சூர்யாவின் மிரள வைக்கும் புதிய புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

.#Kanguva in progress 🔥🔥 @Suriya_offl pic.twitter.com/KxptbAcvGS

— Rajsekar Pandian (@rajsekarpandian) August 19, 2023