'பயங்கரமான வேஷம்னு கூட்டிட்டு போவாங்க.. கடைசில பாத்தா!'- தனது திரைப்பயண ஆதங்கத்தை வெளிப்படுத்திய மன்சூர் அலிகானின் சிறப்பு பேட்டி!

தனது திரைப் பயணம் குறித்து பேசிய மன்சூர் அலிகான்,mansoor ali khan about his characters in tamil cinema | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய உள்ள நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான்.  கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் நடிகராக வலம் வரும் நடிகர் மன்சூர் அலிகான், 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு பிறகு மிகப் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லன் நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் மன்சூர் அலிகான் அவர்கள், நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் கூட மிகச் சிறப்பாக நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகராக வலம் வருகிறார். 

அந்த வகையில் தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் முக்கிய இடத்தில் மன்சூர் அலிகான் நடித்திருக்கிறார். இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக திகழும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து மன்சூர் அலிகான் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் ஏற்கனவே கைதி திரைப்படத்தின் சமயத்தில் அந்த கதாபாத்திரம் மன்சூர் அலிகான் அவர்களை மனதில் வைத்து உருவாக்கியது என லோகேஷ் கனகராஜ் அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதே பாணியில் அதே கதாபாத்திரம் போல் லியோ திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்த “நா ரெடி” பாடலில் மன்சூர் அலிகான் அவர்கள் பிரியாணி சாப்பிடும் காட்சி இடம்பெற்ற இருப்பதால் ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வம் கூடியிருக்கிறது. நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 

இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் மன்சூர் அலிகான் ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் பிரபல நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ராஜூ ஜெயமோகன், மன்சூர் அலிகான் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக மன்சூர் அலிகான் அவர்களுடன் இணைந்து தனது நட்புனா என்னனு தெரியுமா படத்தில் ராஜூ ஜெயமோகன்  நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்த மன்சூர் அலிகான் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய ராஜு ஜெயமோகனிடம் “மன்சூர் அலிகான் அவர்களுடன் இணைந்து நடித்த மறக்க முடியாத அனுபவம்” குறித்து கேட்டபோது, “மறக்க முடியாத அனுபவமாக இருக்காது மரண பயத்தில் தான் இருப்பார்கள். சார் எப்ப என்ன பண்ணுவார் என்று தெரியாது நான் அவருடன் ஒரு படம் நடித்து இருக்கிறேன்” என சொன்னதும், குறிப்பிட்டு பேசிய நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள், “நீங்கள்தான் சொல்கிறீர்கள் நடித்தீர்கள் என்று நல்ல வேஷமே இந்த கோடம்பாக்கத்தில் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். பயங்கரமான வேஷம் என கூட்டிட்டு போறாங்க கடைசியில பார்த்தா ஹீரோவே அடிச்சுட்டு இருக்காரு கேப்டனுக்காக ஓகே எல்லாருக்கும் அப்படின்னா எப்படி.. இது உண்மையிலேயே எனக்கு பிடிக்காத ஒரு விஷயம். என்ன பண்றதுனே தெரியல திரும்பி பார்த்தா வயசாயிடுச்சு” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் மன்சூர் அலிகான் அவர்களின் அந்த சிறப்பு பேட்டியின் முழு வீடியோ இதோ…