சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார். கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்று தனி விமானம் மூலமாக அமெரிக்கா சென்றார். முன்னதாக சில வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கமாக அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காகவும் பரிசோதனைக்காகவும் சென்று பின்னர் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஓய்வெடுப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பரிசோதனையை முடித்து விட்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார். ஓய்வில் இருந்த சமயத்தில் அமெரிக்காவில் வாழும் தனது ரசிகர்களையும் அவ்வபோது நேரில் சந்தித்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
 
இந்நிலையில் பரிசோதனையை முழுவதுமாக முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். இன்று அதிகாலை (3:00am) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை காண பல ரசிகர்கள் குவிந்து இருந்தனர். அதிகாலை விமான நிலையம் வந்தடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய ஏர்போர்ட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஹைதராபாத்தில் தன் பகுதி காட்சிகளை நடித்து முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், அதன் பிறகு அமெரிக்கா  தற்போது சென்று மீண்டும் சென்னை திரும்பியுள்ள நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.