செம ரகளையான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட ட்ரைலர் !
By Aravind Selvam | Galatta | June 03, 2019 12:26 PM IST

கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்து வருகிறார்.Black Sheep குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி,நாஞ்சில் சம்பத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஷபீர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து இந்த படத்திற்கு சென்சார் போர்டு யூ சர்டிபிகேட் வழங்கியுள்ளது.
தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.அரசியல் காமெடி என செம ஜாலியான ஒரு கதையுடன் இளைஞர்களை கவரும் படி யூடியூபை மையப்படுத்தியுள்ள இந்த ட்ரைலர் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்