உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் இயக்குனரான ஜீது ஜோசப் இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், அவரது அன்னியான நடிகை ஜோதிகாவுடன் சேர்ந்து நடிக்கிறார். 

Super Delux Fame Ashwanth Joins The Team Of Karthi Jeethu Movie

அக்கா பாத்திரத்தில் நடிகை ஜோதிகாவும் தம்பியாக நடிகர் கார்த்தியும், இவர்களுடன் நடிகர் சத்யராஜூம் சேர்ந்து நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை RD ராஜசேகர் கையாளப்போகிறார்.

Super Delux Fame Ashwanth Joins The Team Of Karthi Jeethu Movie

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த மாஸ்டர் அஸ்வந்த் இந்த படத்தில் நடிக்கிறாராம். அஸ்வந்த் இதுவரை ஐரா மற்றும் சூப்பர்டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது என்பது கூடுதல் தகவல்.

Super Delux Fame Ashwanth Joins The Team Of Karthi Jeethu Movie Super Delux Fame Ashwanth Joins The Team Of Karthi Jeethu Movie