சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று வானதைப்போல.அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்த தொடர் சூப்பர்ஹிட் தொடராக உருவெடுத்துள்ளது.

தமன் குமார்,ஸ்வேதா கெல்ஜே அண்ணன் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளி வந்தனர்.சில மாதங்களுக்கு முன் இவர்கள் விலக இவர்களுக்கு பதிலாக ஸ்ரீகுமார் மற்றும் மான்யா ஆனந்த் தொடரின் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர்.

தேபாஜினி இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.கார்த்தி,திலக்,ப்ரீத்தி குமார்,மௌனிகா,செந்தில் குமாரி,மகாநதி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.300 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் முத்தையா என்ற கதாபாரத்தில் நடித்து வரும் மனோஜ் குமார் சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.தனது மனைவி மற்றும் உதவியாளருடன் சொந்த ஊருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.அப்போது விக்கிரவாண்டி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

விபத்தில் மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது,அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இவர்களது உடல்நிலை தெரிவருவதாகவும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.மனோஜ் மற்றும் விபத்தில் சிக்கியவர்கள் விரைவில் பூரண குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.