சித்தி 2 தொடர் படைத்த சூப்பர் சாதனை ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | February 03, 2022 11:22 AM IST
1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடித்து வந்தார்.சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது,பின்னர் ஷூட்டிங் தொடங்கிய பின் சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டன.
ப்ரீத்தி ஷர்மா,நந்தன் லோகநாதன்,மீரா கிருஷ்ணன்,மஹாலக்ஷ்மி,தர்ஷனா உள்ளிட்டோர் இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் இருந்தும் சீரியல் நடிப்பில் இருந்தும் வெளியேறுவதாக ராதிகா சில மாதங்களுக்கு முன் திடிரென முடிவெடுத்தார்.ராதிகா இல்லாமல் இந்த தொடரின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.
பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடர் 500 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை படைத்துள்ளது.ரசிகர்கள் பலரும் சீரியல் குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Radikaa Sarathkumar's breaking statement about quitting Chithi 2
11/02/2021 10:25 PM
Chithi 2 going to be stopped? Actress Radikaa's important clarification!
09/02/2021 06:27 PM
Radikaa Sarathkumar's Chithi 2 relaunch promo - with new actors
04/08/2020 11:54 AM