தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி மீது சின்னத்திரை ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. அந்தவகையில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வழக்கம் போல் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது. தனது நகைச்சுவையான நடவடிக்கைகளாலும், கூலான குணாதிசயத்தாலும் அனேக மக்களின் கவனத்தை ஈர்த்த ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டிலை வென்றார்.

அவரைத் தொடர்ந்து 2-வது இடத்தை ப்ரியங்கா பிடிக்க, 3-வது இடத்தை பாவனி கைப்பற்றினார். மேலும் 4-வது மற்றும் 5-வது இடங்களை அமீர் மற்றும் நீருப் ஆகியோர் கைப்பற்றினர். 50 நாட்கள் கழித்து வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த போதும் அமீர் டிக்கெட் டு ஃபினாலி டாஸ்க்கில் மிகச் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் ஆளாக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவனி மற்றும் அமீர் இடையிலான நட்புறவு பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து பிக்பாஸ் வீட்டிலும் வெளியிலும் பல பேச்சுகள் நிலவி வந்தன. இந்நிலையில் நடிகர் விஷால் நடித்த எனிமி படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான டம் டம் பாடலுக்கு பிக்பாஸ் பாவனி மற்றும் அமீர் இணைந்து நடனமாடும் வீடியோ நமது கலாட்டா சேனலில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த வீடியோ இதோ…