1990's-களின் இனிய நினைவுகளாக பிரபுதேவா - ரெஜினா கெஸன்ட்ராவின் ஃப்ளாஷ்பேக்... கவனிக்க வைக்கும் அசத்தலான ட்ரெய்லர் இதோ!

பிரபுதேவா - ரெஜினா கெஸன்ட்ராவின் ஃப்ளாஷ் பேக் ட்ரெய்லர் வெளியீடு,prabhu deva regina cassendra in flashback movie trailer out now | Galatta

நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் பிரபுதேவாவின் தனித்துவமான நடிப்பிற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் அதிரடி ஆக்சன் படமாக தேள், அட்டகாசமான ஃபேன்டஸி காமெடி படமாக மை டியர் பூதம், மாற்றுத்திறனாளியாக சவாலான வேடத்தில் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் படமாக பொய்க்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து பிரபுதேவா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. தொடர்ந்து இந்த 2023ம் ஆண்டில் வித்தியாசமான பல மிரட்டலான கெட்டப்புகளில் பிரபு தேவா நடித்துள்ள மிரட்டலான சைக்கோ திரில்லர் திரைப்படமாக தயாராகி நீண்ட நாட்களாக ரிலீசாக காத்திருந்த பஹீரா திரைப்படம், கடந்த மார்ச் 3ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது.

தற்போது விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து அமைரா டஸ்டர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா செட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர் மற்றும் பிரகதி உள்ளிட்ட பலர் பஹீரா திரைப்படத்தில் நடித்துள்ளனர். பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பஹீரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக அறிமுக இயக்குனர் சாம் ஜோடிக்ரூஸ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக முஸாஸி படத்தில் நடித்து வரும் பிரபு தேவா, சமீபத்தில் பிக் பாஸ் கவின் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டாடா திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் அவர்களின் ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் அன்பு எழுதி இயக்கும் உருவாகவும் ரேக்ளா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

இதனிடையே இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஃப்ளாஷ் பேக். பிரபுதேவா மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிளாஷ்பேக் திரைப்படத்தில் அனுசுயா பரத்வாஜ் விஜய் விஷ்வா இளவரசு உமா ரியாஸ் சான்ஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் உருவாகியுள்ள ஃப்ளாஷ் பேக் திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம்.CS இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவில் ஃப்ளாஷ் பேக் திரைப்படத்திற்கு சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். 1990 களின் இனிமையான நினைவுகள் எனக் குறிப்பிட்டு வெளிவந்துள்ள இந்த ஃப்ளாஷ்பேக் திரைப்படத்தில் எழுத்தாளர் சித்தார்த்தெனும் கதாபாத்திரத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபுதேவாவின் ஃப்ளாஷ் பேக் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. அசத்தலான காட்சி அமைப்புகளோடு அழகான இசையோடும் வெளிவந்துள்ள இந்த பிளாஷ் பேக் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அட்டகாசமான ஃப்ளாஷ் பேக் படத்தின் ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

விடுதலை படத்தை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் சூரி... புதிய பட அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

விடுதலை படத்தை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் சூரி... புதிய பட அட்டகாசமான அறிவிப்பு இதோ!

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் ஹாரர் காமெடி சரவெடி கோஸ்டி … கவனம் ஈர்க்கும் கலகலப்பான ட்ரெய்லர் இதோ!
சினிமா

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் ஹாரர் காமெடி சரவெடி கோஸ்டி … கவனம் ஈர்க்கும் கலகலப்பான ட்ரெய்லர் இதோ!

பொன்னியின் செல்வன் 2 அட்டகாசமான முதல் பாடல் குறித்த அறிவிப்பு...
சினிமா

பொன்னியின் செல்வன் 2 அட்டகாசமான முதல் பாடல் குறித்த அறிவிப்பு... "குந்தவை" திரிஷாவின் இதுவரை பார்த்திராத பிரம்மிப்பான வீடியோ இதோ!