கலர்ஸ் தமிழின் பெரிய வெற்றியடைந்த தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே நவீன் மற்றும் ஹிமா பிந்து இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.சேனலில் பெரிய வெற்றியடைந்த தொடர்களில் இதுவும் ஒன்று.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த தொடரின் முதல் அத்தியாயம் நிறைவடைந்து, புதிய திருப்பங்களுடன் கொஞ்சம் மாறுபட்ட கதைக்களத்தோடு இரண்டாவது அத்தியாயம் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசனிலும் நவீன் மற்றும் ஹிமா பிந்து இருவரும் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.இந்த தொடர் 1000 எபிசோடுகளை விரைவில் எட்டவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்க விறுவிறுப்பாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடரில் புது எண்ட்ரியாக பிரபல சீரியல் நடிகை சுப்புலக்ஷ்மி ரங்கன் இணைந்துள்ளார் என்பது புதிய ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.