தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றம்,வெங்கட் பிரபுவின் மாநாடு,பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

இவர் நடித்துள்ள மாநாடு படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.இந்த ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு பத்துதல  ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னடாவில் சூப்பர்ஹிட் அடித்த Mufti படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது.ஓபுலி N கிருஷ்ணா இந்த படத்தினை இயக்கி வருகிறார்,ஸ்டூடியோ க்ரீன் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.சிலம்பரசன் மற்றும் கெளதம் கார்த்திக் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்து வருகிறார்.

ப்ரியா பவானி ஷங்கர்,கலையரசன்,டீஜே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.சிம்பு விரைவில் இந்த பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று முடிந்துள்ளது என்று ப்ரியா பவானி ஷங்கர் தெரிவித்துள்ளார்.