தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் RRR திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க, பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்கும் இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக RRR திரைப்படம் தயாராகியுள்ளது. 

அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 7 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள RRR திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

RRR திரைப்படத்தை, DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரிக்க, லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. RRR படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைத்துள்ளார். 

முன்னதாக வெளிவந்த RRR-GLIMPSE வீடியோ மற்றும் நட்பு,நாட்டுக்கூத்து & உயிரே ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் RRR படத்தின் ட்ரைலர் வருகிற டிசம்பர் 3-ம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் ட்ரைலர் ரிலீஸ் தள்ளிப்போனது.இதனையடுத்து வருகிற டிசம்பர் 9ஆம் தேதி படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது.