வெற்றிமாறனின் விடுதலை படத்திலிருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள்... ட்ரெண்டாகும் சூரியின் அட்டகாசமான பேட்டி இதோ!

வெற்றிமாறனின் விடுதலை படத்திலிருந்து சூரி கற்றுக் கொண்ட விஷயங்கள்,Soori shared about his learnings from viduthalai movie | Galatta

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக நடிகர் சூரி சினிமாவில் இருக்கிறார்.  ஆம் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவராகவும் மிகச் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த நடிகர் சூரி, படிப்படியாக நகைச்சுவை நடிகராக வளர்ந்து தனது தனித்துவமான நகைச்சுவையால் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆனால் இனி வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல தேர்ந்த நடிகர் என சொல்லும் அளவிற்கு கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்துள்ள சூரி தனது முதல் படமான விடுதலை திரைப்படத்திலேயே அதை நிரூபித்து காட்டியிருக்கிறார். 

ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் கதாநாயகனாக சூரி அறிமுகமாகி இருக்கும் விடுதலை திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த மார்ச் 31ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சூரி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் சூரி விடுதலை திரைப்படம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட ஒரு ஐந்து விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா? எனக் கேட்டபோது, “முதலில் நன்றாக நடிக்க கற்றுக் கொண்டேன் என நினைக்கிறேன். இரண்டாவது மலையில் எங்கு கொடுத்தாலும் நன்றாக வண்டி ஓட்ட  கற்றுக்கொண்டேன் எல்லா இடங்களிலும் ஜீப் ஓட்டுவேன் என நினைக்கிறேன். எனக்கு எங்கேயுமே டூப் இல்லை. பொதுவாக இது மாதிரியான நிலையில் கலைஞர்கள் ஜீப் ஒட்ட முடியாது. வேறு ஏதாவது ஒரு லாரி போன்ற ஒரு வாகனத்தை வைத்து அதன் மீது அந்த ஜிப்பை வைத்து அவர்கள் ஓட்டுவது போல படமாக்குவார்கள். சில இடங்களில் ஜிப்பை வைத்தே எடுப்பார்கள் ஆனால் வேறு ஒரு டிரைவர் ஓட்டுவார். அந்த நடிகருக்கு ஏற்ற மாதிரி ஒரு ஆளை வைத்து அவர்தான் டூப் போடுவார். இதிலும் அதே மாதிரி ஒரு டூப் கொண்டு வந்தார்கள். அதேபோல் அதற்கான பிரத்தியேக லாரியையும் சில லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் அதை ஒரு நாள் கூட பயன்படுத்தவில்லை என்றுதான் நினைக்கிறேன். எல்லாமே நானே தான் ஓட்டினேன். அதேபோல் சண்டை காட்சிகளிலும் அதே தான். மாஸ்டர் எனக்காக ஒரு டூப் வைத்திருந்தார். ஷாட் எடுப்பதற்கு முன்பு எல்லாம் அவரை வைத்து பார்ப்பார்கள் ஆனால் ஷாட் வரும் போது நானே தான் செய்வேன். மாஸ்டர் ஒரு நம்பிக்கை கொடுத்து விடுவார் எனக்கு, நீங்களே செய்யுங்கள் என்று... படத்தில் எனக்கு தெரிந்து டூப் எதுவுமே இல்லை.” என சூரி பதிலளித்துள்ளார். சூரியின் அந்த முழு பேட்டி இதோ…
 

சிலம்பரசன்TRன் விண்ணைத்தாண்டி வருவாயா பட வாய்ப்பு குறித்து மனம் திறந்த வாணி போஜன்! வைரல் வீடியோ
சினிமா

சிலம்பரசன்TRன் விண்ணைத்தாண்டி வருவாயா பட வாய்ப்பு குறித்து மனம் திறந்த வாணி போஜன்! வைரல் வீடியோ

பள்ளியில் என்னென்ன சேட்டைகளுக்கு அடி வாங்கினார்?- சூரியின் கலாட்டாவான நினைவுகளை பகிர்ந்து கொண்ட வாத்தியார்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

பள்ளியில் என்னென்ன சேட்டைகளுக்கு அடி வாங்கினார்?- சூரியின் கலாட்டாவான நினைவுகளை பகிர்ந்து கொண்ட வாத்தியார்! ட்ரெண்டிங் வீடியோ

“இன்னும் அந்த ஸ்டைல் படங்களில் இருக்கிறது!”- சூரி போல் நடந்து காட்டிய அவரது பள்ளிக்கூட வாத்தியார்! கலகலப்பான வீடியோ இதோ
சினிமா

“இன்னும் அந்த ஸ்டைல் படங்களில் இருக்கிறது!”- சூரி போல் நடந்து காட்டிய அவரது பள்ளிக்கூட வாத்தியார்! கலகலப்பான வீடியோ இதோ