சிவகார்த்திகேயன் படைத்த புதிய சாதனை ! உற்சாகத்தில் ரசிகர்கள்
By | Galatta | July 12, 2020 14:03 PM IST
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனவால் பாதிக்கப்பட்டுளள்து.
படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் திரைப்படம் கொரோனா பாதிப்பு சரியான பின் வெளியாகும் என்று தெரிகிறது.இதனை தவிர சில பாடல்களுக்கு படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.
கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பலரும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.சிவகார்த்திகேயன் ட்விட்டரிலும்,இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது ஆக்டிவ் ஆக இருப்பவர்.சினிமாவை தாண்டி தனக்காக ரசிகர்கள் எடுக்கும் சின்ன சின்ன முயற்சிகளான வித்தியாசமான வீடியோக்கள்,புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்வார்.அதோடு தன்னை சுற்றி நடக்கும் சமூகப்பிரச்னைகளுக்கும் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிடுவார்.
தற்போது ட்விட்டரில் அதிகம் ரசிகர்களை பெற்று ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.ட்விட்டரில் அதிகம் தொடரப்பட்ட தமிழ் நடிகர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில உள்ளார் சிவகார்த்திகேயன்.6 மில்லியன் ரசிகர்களை பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இதன் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் சூர்யாவை முந்தி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.முதல் இரு இடங்களில் தனுஷ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளனர்.கமல்ஹாசனுக்கு சிவகார்த்திகேயனுக்கும் மிக சிறிய வித்தியாசமே என்பதால் விரைவில் இரண்டாவது இடத்துக்கு சிவகார்த்திகேயன் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
Viral Video: Kadhai + Thiraikadhai + Vasanam + Iyakkam - Thalapathy Vijay
12/07/2020 01:38 PM
National Award Winning Legendary Actor's Family Tested Positive for Corona Virus
12/07/2020 12:18 PM
Suriya announces new film - Legendary star hero and superhit director onboard!
12/07/2020 11:00 AM