Breaking : சிவகார்த்திகேயனின் Mr.Local ரிலீஸ் தேதி இதோ !
By Aravind Selvam | Galatta | February 13, 2019 19:02 PM IST
இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.Local.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .அவரோடு ராதிகா ,சதிஷ் ,தம்பி ராமையா , எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது . ஹிப்- ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .
பொதுவாக ராஜேஷ் படங்களின் டைட்டில் அனைவரையும் ஈர்க்கும்படி இருக்கும். அதேபோல இந்த படத்திற்கும் பொருத்தமான டைட்டில் வைத்துள்ளார்.மேலும் ராஜேஷ் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது.அவரோடு சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோவும் , சதிஷ்,யோகி பாபு போன்றவர்களும் கைகோர்ப்பதால் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
. #MrLocal 😉
— Studio Green (@StudioGreen2) February 13, 2019
The Electric @Siva_Kartikeyan ⚡️@rajeshmdirector Combo, will Rock the Screens from MAY 1st! 😍#MrLocalOnMayDay@kegvraja #Nayanthara @hiphoptamizha @realradikaa @actorsathish @iYogiBabu @SF2_official @thinkmusicindia @DoneChannel1 #MrLocalReleaseDate pic.twitter.com/uRx2L5DIIN