ஒடிடியில் வெளியாகும் ஊர்வசியின் 700வது திரைப்படம் ‘அப்பத்தா’ – கவனம் ஈர்க்கும் டிரைலர் இதோ..

ஊர்வசியின் 700 வது படமான அப்பத்தா டிரைலர் இதோ - Urvashi 700th film appatha trailer and ott release announcement | Galatta

தென்னிந்தியாவின் ஆகசிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகை ஊர்வசி. 80களின் பிற்பகுதியில் மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் நடித்து மலையாள திரையுலகில் புகழ் பெற்று வந்திருந்தார். அதையடுத்து தமிழில் 1983 ல் இயக்குனரும் நடிகருமான பாக்யாராஜின் ‘முந்தானை முடிச்சு’ படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டார் நடிகர் ஊர்வசி. அதையடுத்து தமிழில், தாவணி கனவுகள், எழுதாத சட்டங்கள், பாட்டி சொல்லை தட்டாதே, மைக்கேல் மதன காம ராஜன், மகளிர் மட்டும், மாயா பஸார் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதே நேரத்தில் மலையாளத்திலும் மிழிநீர்பூவுகள், கொட்டும் குரவையும், அனுராகி, பத்முத்ரா போன்ற பல ஹிட் படங்களில் நடித்து மலையாலத்திலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் ஊர்வசி நடித்து வந்துள்ளார். முன்னதாக தமிழில் இவரது நடிப்பில் வெளியான இடியட், வீட்ல விசேஷம், கோஷ்டி, காசேதான் கடவுளடா  ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்வித்தன. தற்போது நடிகை ஊர்வசி தமிழில் பா ரஞ்சித் தயாரிப்பில் ஜே.பேபி நடித்து வருகிறார். மலையாளத்தில் உள்ளோழுக்கு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பல தசாபதங்களாக கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த நடிகை ஊர்வசியின் 700 வது திரைப்படமாக உருவாகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அப்பத்தா’. பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் முதன்மை கதாபத்திரம் ஏற்று நடித்துள்ளார் நடிகை ஊர்வசி. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் மீது தனி எதிர்பார்ப்பை உருவாக்குமளவு இப்படத்தின் டிரைலர் அமைந்துள்ளது.தற்போது வெளியாகியுள்ள டிரைலரில் மகனின் அழைப்பால் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் தாய் ஊர்வசி, மகன் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணி நாய் பார்த்து பயப்படுகிறார். நாய் க்கும் ஊர்வசிக்கும் இடையே நடைபெறும் கலகலப்பான காட்சிகள் நிறைந்த படமாக அப்பத்தா உருவாகியுள்ளது.வரும் ஜூலை 29 ம் தேதி நடிகை ஊர்வசியின் 700 வது படமான ‘அப்பத்தா’ பிரபல ஒடிடி தளமான  ஜியோ சினிமாஸ் ல் நேரடியாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“அன்னிக்கு சொன்னதை இன்னிக்கும் செஞ்சிட்டு வராரு..” எஸ்.ஜே சூர்யா குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த நடிகர் விஷால்..!
சினிமா

“அன்னிக்கு சொன்னதை இன்னிக்கும் செஞ்சிட்டு வராரு..” எஸ்.ஜே சூர்யா குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த நடிகர் விஷால்..!

“கடல் ராசா பாடலை முதலில் பாடியது இவர் தான்..” மரியான் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த இயக்குனர் பரத் பாலா.. வீடி
சினிமா

“கடல் ராசா பாடலை முதலில் பாடியது இவர் தான்..” மரியான் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த இயக்குனர் பரத் பாலா.. வீடி

அலப்பறை கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள்.! ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. விவரம் இதோ..
சினிமா

அலப்பறை கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள்.! ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. விவரம் இதோ..