சிவகார்த்திகேயனின் ஏலியன் என்டர்டெய்னர் அயலான் பட புது சர்ப்ரைஸ்... ட்ரெய்லர் ரிலீஸை முன்னிட்டு வந்த ஸ்பெஷல் போஸ்டர்!

சிவகார்த்திகேயனின் அயலான் பட ட்ரெய்லர் ரிலீஸ் போஸ்டர்,sivakarthikeyan in ayalaan trailer release special poster | Galatta

சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் பிக்சன் படமான அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது. விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் களமிறங்கி படிப்படியாக வளர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு படங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா எண்டர்டெய்னிங் படங்களாக வெளி வருகின்றன. அந்த வகையில் கடைசியாக மண்டேலா படத்தின் இயக்குனர் மதன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது தொடர்ந்து அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அட்டகாசமான திரைப்படங்கள் தயாராக உள்ளன. 

அந்த வகையில் தற்போது உலகநாயகன் கமஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நிறைவடைந்தது.  இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படமாக உருவாகும் SK23 படத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த இந்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமான ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக வெளிவர தயாராகி வரும் திரைப்படம் தான் அயலான். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள அயலான் திரைப்படத்தில், இஷா கோபிகர், சரத் கேல்கர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவில் அயலான் திரைப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அட்டகாசமான ஏலியன் திரைப்படமாக தயாராகி வரும் அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட VFX பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டு  தீபாவளி வெளியீடாக அயலான் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முழுவதும் நிறைவடையாததால் தரமான படைப்பாக அயலான் படத்தை வழங்க முடிவு செய்த படக்குழுவினர் 2023 தீபாவளி வெளியீடாக வெளிவர இருந்த சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் அடுத்த 2024 ஆம் ஆண்டில் பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என தெரிவித்தனர்.

முன்னதாக அயலான் திரைப்படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். அதனை அறிவிக்கும் வகையில் ஏலியனோடு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிவகார்த்திகேயன் இயக்குனர் ரவிக்குமார் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து தற்போது அயலான் டீசர் ரிலீஸ் முன்னிட்டு ஸ்பெஷலான புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. சினிமா தியேட்டரில் ஏலியனோடு சிவகார்த்திகேயன் படம் பார்ப்பது போன்ற இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த புதிய போஸ்டர் இதோ...
 

#AyalaanTeaserFromOct6 😊👍#Ayalaan 👽#AyalaanFromPongal#AyalaanFromSankranti@arrahman @Ravikumar_Dir @Rakulpreet @TheAyalaan @ishakonnects @SharadK7 @nirav_dop @AntonyLRuben @iYogiBabu #Karunakaran @Bala_actor @muthurajthangvl @bejoyraj @Viswanathart @anbarivpic.twitter.com/1ZGOc1mTon

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 4, 2023