தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கிய சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜின் மெரினா திரைப்படம் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார். ஹீரோவாக கோலிவுட்டுக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் ஆவார். அவர் நடிகர் மட்டும் அல்ல ஒரு தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகரும் கூட. 

சமீபத்தில் மாநில அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார் நம்ம வீட்டு பிள்ளை SK. சிவகார்த்திகேயனின் வெற்றியை அவர்களது சொந்த வெற்றியாக கொண்டாடினர் ரசிகர்கள். 

டாக்டர், அயலான் இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் முடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இவர் நடிக்கும் அடுத்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த படத்தில் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,பாலா சரவணன்,RJ விஜய்,சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த ஷூட்டிங்கிற்கிடையே சிவகார்த்திகேயன் டான் படக்குழுவினருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார் இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகின்றன. கல்லூரி பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தன் உடல் எடையை சற்று குறைத்திருக்கிறார். 

இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்ததாக இயக்குனர் சிபி பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.