சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை தனது முத்திரையை பதித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து அயலான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அடுத்ததாக டான் படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.டாக்டர் படத்தினை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா பட இயக்குனருமான நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.அருண் அலெக்சாண்டர்,அர்ச்சனா,இளவரசு,வினய்,யோகி பாபு,தீபா,ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசதியுள்ளனர்.இந்த படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

காமெடி என்டேர்டைனராக திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளிவரும் இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் ரொமான்டிக் பாடலான ஸோ பேபி பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்