சினிமா மக்களை மகிழ்விக்கும் கலைகளில் முக்கியமான ஒன்று.இந்த சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி தங்கள் கனவுகளை மெய்படுத்தி வாழ்க்கையில் ஜெயித்து மக்களையும் மகிழ்விக்க பலரும் போராடி வருகின்றனர்.அப்படி சினிமாவில் பலரும் போராடி ஜெயித்து தங்கள் வெற்றியை நிலைநாட்டி நட்சத்திரங்களாக உயர்ந்து நிற்கின்றனர்.

அப்படி கடந்த 10 வருடங்களாக போராடி தனது விடாமுயற்சியால் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் பாடகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஸ்வாகதா கிருஷ்ணன்.பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஸ்வாகதா.

பாட்டு பாடுறது மட்டும் இல்ல மியூசிக் கம்போஸிங்கிலும் தனது திறமையை வளர்த்து வருகிறார் ஸ்வாகதா.இன்ஸ்டாகிராமில் பல முன்னணி ஹீரோயின்களுக்கு Tough குடுக்கிற மாதிரி இவரோட போட்டோஸ் ரசிகர்கள் கிட்ட செம பேமஸ்.

இன்ஸ்டாவுல வேற லெவல்ல இவங்க போட்டோ ரீச் ஆக பல படவாய்ப்புகள் இவரை தேடி வந்தது,ஒரு நல்ல கதைக்காக வெயிட் பண்ண ஸ்வகந்தாவுக்கு இப்போ ஒரு சூப்பரான கதை கிடைச்சிருக்கு அந்த படத்தோட ஷூட்டிங்கையும் முடிச்சு தமிழ் சினிமாவுல ஹீரோயின் ஆக என்ட்ரி கொடுக்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க ஸ்வாகதா.

இதைத்தாண்டி இன்னும் ஒரு சில படங்கள்ல ஹீரோயினாக நடிச்சுட்டு இருக்காங்க.இவ்வளோ பிஸியா தன்னோட On Screen Debut காக வெயிட் பண்ணிட்டு இருக்க ஸ்வாகதவை போன்ல ஒரு சின்ன இன்டெர்வியூ காக புடிச்சோம்,எப்போவும் போல ஒரு பாடகரை புடிச்சு உங்க பாட்டு எப்படி உங்க பாடல்களை பாடுங்க போன்ற ஜெனரல் கேள்விகள் இல்லாமல் அவங்க ஷேர் பண்ண சில சுவாரசியமான விஷயங்களை பத்தி வாங்க பாக்கலாம் :

மண்மணம் மாறாத மதுரைக்கார பொண்ணு மதுரைல ரெண்டு விஷயம் பேமஸ் ஒன்னு கோவில் இன்னொன்னு சாப்பாட்டு கடை , நீங்க பக்திமானா இல்ல சாப்பாட்டு ராமனா...?

என்னோட Modern posts எல்லாம் பார்த்த அப்பறம் இதை நான் சொன்னா நம்புவீங்களான்னு தெரியல, நான் மிகப்பெரிய பக்திமான்.மதுரைல இருந்தப்போ டெய்லி கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு போய்டுவேன்.அதுக்கப்பறம் வாரா வாரம் என்ன ஆனாலும் போயிட்டு இருந்தேன்.சென்னை வந்த அப்பறம் திருவான்மியூர்ல இருக்க கோவில் ஒண்ணுக்கு தவறாம போயிருவேன்.பெருமாளுக்கும் எனக்கும் Wavelength அப்படி அவர் மூலமா தான் எனக்கு நல்லது நிறைய நடந்திருக்குன்னு நம்புறேன்.கடவுள் பக்தி அதிகமாக கொண்ட ஆள் நான் , நிறைய பக்தி பாடல்களும் ரெடியா இருக்கு விரைவில் அதெல்லாம் ரிலீஸ் ஆகும்.

Basic-ஆ நான் வெஜிடேரியன் தான் , மதுரைல இருந்த வரைக்கும் நான் பெருசா வெளியே சாப்பிட்டதில்லை,வீட்லயே அம்மா அட்டகாசமா சமைச்சு அசத்திருவாங்க வெளிய போனாலும் veg ஹோட்டல்கள் தான்,வேற ஊருக்கு போன அப்பறம் தான் மதுரையோட சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்ணேன்.

singer swagatha s krishnan ready to take part in cooku with comali

90'ஸ் கிட் ஆக எதையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றீங்க...?

சின்ன வயசுல கிரிக்கெட் ஆடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்,வெளியே போய் எல்லாரோடையும் சேர்ந்து விளையாடுற சுகமே தனி அதோட நம்ம தான் இந்த Technology Growth-தோட சேர்ந்து வளந்துருக்கோம் நம்ம Casette-லயும் பாட்டு கேட்ருக்கோம் இப்போ Online Portals-ல கேட்டுட்டு இருக்கோம்,நம்ம நிறைய வெளிய தான் டைம் செலவு பண்ணிருக்கோம் But இப்போ இருக்க Generation நம்ம பண்ண நிறைய விஷயங்கள் தெரியாது.ஆனா நம்மள விட advance-ஆ நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிறாங்க அந்த ஸ்பீட் ரொம்ப ஆபத்தானதா தெரியுது.எனக்கு 10-th படிக்கிறப்போ தெரிஞ்ச ஒரு விஷயம் ,இப்போ இருக்க நாலு வயசு பையனுக்கு தெரியுது,குழந்தைங்க கொஞ்ச நாளைக்கு குழந்தைங்களா இருக்கணும்ன்றது என்னோட விருப்பம் ஒரு டைமுக்கு மேல கத்துக்கிட்டா நல்லதுன்னு தோணுது.

பெரிய கார் பிரியர்னு கேள்வி பட்டிருக்கோம் ஸ்வாகதாவுக்கு ரொம்ப பிடிச்ச கார் எது,ஏன்...?

Luxury Cars மேல அலாதி பிரியம்,Especially BMW தான் என்னோட Favourite.அதுவும் என்னோட உழைப்புல வாங்கணும்னு சம்பாரிச்சு வாங்குனேன் இப்போ வெச்சுருக்க BMW 7 Seires கார்.இதுதவிர Range Rover இன்னொரு Favourite. 

அதிகமா ட்ராவல் பண்ற ஆள் நீங்க,உங்களோட Favourite Destination எது...?

Tourist ஆக ரொம்ப பிடிச்ச இடம்னா ரஷ்யா,அங்க அவ்ளோ இடம் இருக்கு சுத்தி பார்க்க.மனசுக்கு பிடிச்ச இடம்னா என் Friends இருக்க மலேஷியா அப்பறம் அக்கா வீடு இருக்க Boston.நிறைய ட்ராவல் பண்ணுவேன் நிறைய ஷாப்பிங் பண்ணுவேன் எனக்கு Jewellery அவ்ளோவா பிடிக்காது But Handbags,Shoes,Watches இதெல்லாம் பயங்கரமாக ஷாப்பிங் பண்ணுவேன்.

singer swagatha s krishnan ready to take part in cooku with comali

சிங்கரா என்ட்ரி,அந்த டைம்ல கேமரா பாத்தாலே பயம்ன்னு சொன்ன பொண்ணு இப்போ ஒரு படத்துல ஹீரோயின் ,இந்த Change Over எப்படி ஏற்பட்டது...?

என்னோட இன்ஸ்டாகிராம் பார்த்து பல வாய்ப்புகள் வந்துச்சு ஆனா நிறைய தயக்கம்,பயம் நம்மளால இதை கரெக்டா பண்ண முடியுமான்னு ரொம்ப யோசிச்சேன்.என்னோட நலன் விரும்பிகள் அப்பறம் எனக்கு நெருக்கமான சில Stalwarts சினிமாவுல வாய்ப்பு எல்லாருக்கும் இப்படி தேடி வராது கிடைக்குற வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோன்னு சொன்னாங்க.அவங்க கொடுத்த நம்பிக்கை தான் நடிகை ஸ்வாகதாவை உருவாக்கியது.முடிஞ்சளவு நடிச்சிருக்கேன் படம் ரிலீஸ் ஆனதும் எப்படி இருக்குன்னு பாத்துட்டு சொல்லுங்க.

சினிமா Background இல்லாமல் நிறைய போராடி வந்துருக்கீங்க,வாழ்க்கையை மாற்றிய சிங்கப்பெண் Moment எது...?

சில வருஷம் முன்னாடி பல பேரு என்ன ஏமாத்திருக்காங்க எல்லாத்தையும் இழந்து எதுமே இல்லமால் இருந்திருக்கேன்.அப்போதான் எனக்கு நிறைய விஷயங்கள் புரிஞ்சது நிறைய மாத்திக்கிட்டேன்.என்னோட உடம்பு,மனசுன்னு எல்லாமே Transform பண்ணிட்டு போராடி இப்போ இருக்குற இடத்துக்கு வந்துருக்கேன் இன்னும் நிறைய போராடுவேன்.இங்க இருக்குற பொண்ணுங்க எல்லாருமே சிங்கபெண்களா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன் யாரையும் நம்பாம அவங்க உழைப்புல அவங்க சொந்தகாலுல நின்னு ஜெயிக்கணும்.இப்போ இந்த டைம்ல நான் சம்பாரிச்சத வெச்சு கஷ்டப்படறவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளை செஞ்சுட்டு இருக்கேன்.

ஸ்வாகதாவின் celebrity Crush...?

விஜய்சேதுபதியை ரொம்ப புடிக்கும்,அவரோட படங்கள் ஆகட்டும்,எல்லார் கிட்டயும் பழகுற விதம் இப்படி நிறைய இருக்கு.அதேபோல ரஜினி சார்,கமல் சார்,அஜித் சார்,விஜய் சார்,சிவகார்த்திகேயன்,தனுஷ்,STR இப்படின்னு என்னோட லிஸ்ட் ரொம்ப பெருசு.

singer swagatha s krishnan ready to take part in cooku with comali

ஸ்வாகதா Selfie எடுக்க விரும்பும் ஒரு சினிமா பிரபலம்...?

AR ரஹ்மான் சார்.என்னதான் இளையராஜா சாரோட தாக்கம் இருந்தாலும் , மியூஸிக்கில் பல புதுமைகளை கொண்டுவந்தவர் ரஹ்மான் தான்.அவர் பண்ண நிறைய பாட்டுல ஒரு பார்ட்டா இருந்துருக்கேன் அவரை பல முறை ரொம்ப கிட்ட பார்த்தும் இருக்கேன்.அவரோட ஒரு பாட்டு பண்ணி, பேசி ஒரு Selfie எடுக்கணும்னு ரொம்ப ஆசை.ரஹ்மான் சார் மியூசிக்கில வான் வருவான்,நெஞ்சுக்குள்ள அப்படிப்பட்ட பாடல்கள் மாதிரி ஒரு தனி பாடல் பாடி அசத்தணும்னு ஆசை,அனிருத் இசையில ஒரு பாடல் பாடணும்னு ஆசை.

இவங்க கூட நிச்சயம் நடிச்சிரணும் அப்படினு நினைக்கிற ஹீரோக்கள்...?

தல,தளபதி கூட நடிக்கணும்னு எல்லாருக்குமே ஆசை இருக்கது போல எனக்கும் இருக்கு.விஜயசேதுபதி,சிவகார்த்திகேயன்,சூர்யா,தனுஷ்,STR இவங்க கூடலாம் நடிச்சுரணும்னு ரொம்ப ஆசை.இப்போதான் முதல் படம் நடிச்சிருக்கேன் ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆகட்டும் காலம் தான் பதில் சொல்லும்.

singer swagatha s krishnan ready to take part in cooku with comali

Instagram உங்களுக்கு ஒரு பெரிய ஹெல்ப்பா இருந்துருக்கு உங்களோட ரீச்சுக்கு இது தொடங்குனது எப்படி...?

போன லாக்டவுன் வரைக்கும் எனக்கு என்னோட இன்ஸ்டாகிராம் Password கூட தெரியாது,என்னோட Friend தான் இன்ஸ்டாக்ராமை பார்த்துட்டு இருந்தது.லாக்டவுன் டைம்ல தான் இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ண கத்துக்கிட்டேன்.இது எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்டா இருந்தது.Friends எல்லாம் சேர்ந்து சும்மா ஜாலியா போட்டோஷூட் பண்ணி அதை போஸ்ட் பண்ணோம் பார்த்தா நாங்க எதிர்பார்க்காத ரீச்.அடுத்தடுத்து நான் போஸ்ட் போட்டதும் மக்களுக்கு புடிச்சது.எனக்கு காமெடி ரொம்ப புடிக்கும் அதுனால லாக்டவுன்ல தங்கச்சியோட சேர்ந்து நிறைய காமெடி வீடீயோஸ் போட்டேன்.

என்னோட Profile பாக்குறவங்க Positive-வா ஃபீல் பண்ணனும் அது மட்டும் தான் என்னோட மைண்ட்ல இருந்தது.இன்ஸ்டாகிராம் மூலமா நம்ம பண்றது நாலு பேருக்கு தெரியுது அது மூலமா தான் எனக்கு பட வாய்ப்புகளும் சரி,பாடல் வாய்ப்புகளும் சரி எல்லாமே ஸ்டார்ட் ஆனது இன்ஸ்டாவில் தான்.

ஸ்வாகாதா அதிகம் விரும்பி பார்க்கும் டிவி ஷோஸ்...?

எங்க வீட்ல அதிகமா யாரும் டிவி பார்க்கமாட்டோம் அதுனால கேபிள் கூட கிடையாது ஆனா ஊர்ல இருக்குற எல்லா OTT-யும் Subscribe பண்ணி வெச்சுருக்கேன்.இங்கிலிஷ் சீரிஸ் எக்கச்சமா பாத்துருக்கேன் Friends எனக்கு ரொம்ப புடிச்ச சீரிஸ்,Bore அடிக்கிறப்போ அல்லது சோகமா இருக்கப்போலாம் Friends தான் எனக்கு Stressbuster.

தமிழ்ல பிக்பாஸ் First சீசன் வீட்ல எல்லாருமே விரும்பி பார்த்தோம் அடுத்து அதை பார்க்கல.இதுதவிர சூப்பர் சிங்கர்,குக் வித் கோமாளியோட கிளிப்பிங்ஸ் இன்ஸ்டாகிராம்ல பார்த்து அப்டியே புடிச்சுபோய் Full எபிஸோட்ஸ் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.குக் வித் கோமாளில எல்லாரையுமே ரொம்ப புடிக்கும் ரொம்ப புடிச்சது மணிமேகலை, அவங்கள ஏன் நிறைய பேர் பாரட்டலைன்னு எனக்கு தோணும்,அவங்க counter எல்லாம் வேற லெவல்.குக்ல அஸ்வின் தான் அந்த மாதிரி சமைக்க தெரிஞ்ச அழகான ஒரு பையன் இருந்தா எந்த பொண்ணுக்கு தான் பிடிக்காது.

singer swagatha s krishnan ready to take part in cooku with comali

பிக்பாஸ்,குக் வித் கோமாளிக்கு கூப்பிட்ட கலந்துப்பீங்களா...?

நான் ரொம்ப Silent and Sensitive அதுனால பிக்பாஸ்க்கு நான் செட் ஆகவே மாட்டேன்,யார் மேலயாவது கோபம் இருந்தாலும் அமைதியா தியானம் பண்ண ஆரம்பிச்சுடுவேன்.எனக்கு சமைக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம் வித விதமா சமைச்சு அசத்துவேன்,குக் வித் கோமாளி மாதிரி ஒரு Program-ல என்ன கூப்பிட்டாங்கன்னா Why Not கண்டிப்பா கலந்துக்குவேன் 

ஸ்வாகாதாவின் அடுத்தக்கட்ட திட்டங்கள்...?

J ஸ்டுடியோஸ் புரொடக்ஷன்ல காயல் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சுது சீக்கிரம் படம் வந்துரும்,நல்ல ஒரு ரொமான்டிக் ட்ராவல் படம்.இதுக்கு அடுத்ததா 2 படம் Sign பண்ணிருக்கேன் அதோட Announcement சீக்கிரம் வரும்.நிறைய ஆல்பம் சாங்ஸ் ரெடி பண்ணிருக்கேன் அதுவும் ஒன்னு ஒண்ணா ரிலீஸ் ஆகும்.பாட்டு ஒரு 4,5 படத்துல பாடியிருக்கேன் அதுவும் சீக்கிரம் ரிலீஸ் ஆகும்.

கமர்ஷியல் ஹீரோயின்,கதைக்கு தேவையான ஹீரோயின் எந்த மாதிரி கேரக்டர்கள் பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்குறீங்க...?

இப்போதான் ஹீரோயினா வந்துருக்கேன் எனக்கு வரும் கதைகள் எனக்கு பிடிச்சுருந்த நிச்சயம் நடிப்பேன்,அது கமர்ஷியல் படமாகவே இருந்தாலும் சரி எனக்கு அந்த கதையும் கதாபாத்திரமும் பிடித்திருந்தால் போதும் நிச்சயமாக நடிப்பேன்.இந்த 1 வருஷத்திலே நிறைய கதைகள் கேட்டிருக்கேன் காயல் கதை எனக்கு ரொம்ப புடிச்சு போகவே உடனே ஓகே சொல்லிட்டேன் அப்படி எனக்கு பிடிச்ச மாதிரி கதைகளுக்காக வெயிட் பண்றேன்.சினிமாவுக்காக டான்ஸ்,ஸ்டண்ட் என்று அனைத்தும் கற்று வருகிறேன்.

singer swagatha s krishnan ready to take part in cooku with comali

ஹீரோயினா மட்டும் தான் பண்ணுவீங்களா இல்ல முக்கிய கதாபத்திரம் கிடைச்சாலும் நடிப்பீர்களா...?

Character ரொம்ப Strong-ஆ இருக்கனும் அது ஹீரோயின் மட்டும் தான்னு இல்ல supporting Characters-னாலும் நிச்சயம் நடிப்பேன்.ஐஸ்வர்யா ராஜேஷோட Script Selection எனக்கு ரொம்ப புடிக்கும் காக்கா முட்டை,நம்ம வீட்டு பிள்ளை ன்னு ஹீரோயினா நடிக்காட்டியும் அந்த படங்கள்லாம் கலக்கிருப்பாங்க,அவங்கள மாதிரி Variety ஆன கேரக்டர்ஸ் பண்ணனும். எனக்கு காமெடி கலந்த கேரக்டர் ரொம்ப புடிக்கும்,வில்லியா நடிக்க பெருசா விருப்பம் இல்லை பட் நல்ல Role கிடைச்சா அதுவும் Try பண்ணுவேன்.

ஸ்வாகதவை Impress பண்ணி அவங்க Life Partner ஆக ஒரு பையனுக்கு என்ன Qualifications இருக்கணும்...?

Life partner ஆக என்கிட்ட பெருசா Conditions எதுவும் இல்ல, பாக்குறதுக்கு அழகா இருக்குறது முக்கியம் இல்ல,புத்திசாலியா இருக்கனும் எந்த பிரச்னையையும் Face பண்ண தெரிஞ்சவரா இருக்கனும்,பொண்ணுங்கள மதிச்சு அவங்கள நல்ல நடத்தணும்,Mutual Respect,Mutual Freedom கொடுக்கணும்,இதெல்லாம் இருந்தா எனக்கு OK.

singer swagatha s krishnan ready to take part in cooku with comali

நம்ம கேட்ட பல கேள்விகளுக்கு அவ்ளோ பொறுமையா அவ்ளோ கூலா ஜாலியா சிரிச்சிட்டே பேசுனாங்க ஸ்வாகதா.உங்க பாடல்கள் ஹிட் ஆனது போலவே உங்களோட வெள்ளித்திரை பயணமும்,உங்களோட அடுத்த எல்லா முயற்சிகளும் ஹிட் ஆகி ரசிகர்களோட கனவுகன்னியா நீங்க பெரிய இடத்துக்கு போக கலாட்டா சார்பா வாழ்த்துக்களை தெரிவிச்சுகிறோம்.