"மிகவும் வக்கிரமானவர்கள்.. விஷத்தன்மை வாய்ந்தவர்கள்"- பிக் பாஸ் 7வது சீசனின் மாயா & ஜோவிகா GANGஐ கிழித்தெடுத்த சுசித்ரா! ட்ரெண்டிங் வீடியோ இதோ

பிக் பாஸ் 7வது சீசனின் மாயா & ஜோவிகா GANGஐ கிழித்தெடுத்த சுசித்ரா,singer suchithra blasts maya and jovika gand in bigg boss tamil | Galatta

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனி திடீரென ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதற்கு சில நாட்கள் முன்பும் அதன் பின்பும் தொடர்ச்சியாக மாயா தலைமையில் ஜோவிகா, பூர்ணிமா, ரவீனா, மணி, நிக்சன், ஐஷு, சரவண விக்ரம், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டை மொத்தமாக சர்வாதிகாரம் செய்வது போல் நடந்து கொள்வதாக தங்களது விமர்சனங்களை ரசிகர்கள் கொட்டி வருகின்றனர். புதிதாக வந்த WILD CARD போட்டியாளர்கள் அனைவரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி விட்டு சீனியர் - ஜூனியர் என்ற பாகுபாட்டில் அட்ராசிட்டி என்ற பெயரில் மாயா & ஜோவிகா GANG செய்யும் இந்த செயல்பாடுகள் அனைவரையும் முகம் சுளிக்கும் வகையில் தான் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக பிரதீப் ஆண்டனி மீது அவர்கள் வசதிக்கேற்ப திட்டமிட்டு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் வெளியேற்றப்பட்டார் என பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த பிரபல பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா, பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிகள் தற்போது வீட்டுக்குள் இருக்கும் மாயா மற்றும் அவரது GANGஐ மிகக் கடுமையாக விமர்சித்தார். அந்த வகையில், “இப்போது ஒரு பக்கம் பெண்கள் உள்ளே பாதுகாப்பாக உணரவில்லை என்று சொல்லி பிரதீப்பை வெளியேற்றுகிறார்கள்.” என்று சொன்னபோது, “பெண்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்று யாருமே சொல்லவில்லை. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பெண்களும் அவரை வெளியே வீசி இருக்கிறார்கள். ஒவ்வொரு வித்தியாசமான பொய்களை சொல்லி தூக்கி எறிந்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பாக உணரவில்லை என தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பெண்களும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.” என்றார். தொடர்ந்து அவரிடம், “அந்த ரெட் கார்டு கொடுப்பதற்கு உரிமைக்குரல் எழுப்பினார்களே?” எனக் கேட்ட போது, “அந்த லேபிள் ஒட்டவே ஒட்டாது. பெண்கள் உள்ளே பாதுகாப்பாக உணரவில்லை என்ற லேபிள் அவர்களுக்கு (மாயா, ஜோவிகா, பூர்ணிமா, ரவீனா, ஐஷு) ஒட்டவே ஒட்டாது.” என்றார் மேலும் அவரிடம், “இது ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாக சர்வாதிகாரம் மாதிரியான ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். இது சரியா?” என கேட்டபோது, “நிச்சயமாக இது சரி இல்லை. பொய் சொல்வதும் சரியில்லை சர்வாதிகாரம் செலுத்துவதும் சரியில்லை. அது ஒரு நல்ல இயல்புடையதாக இல்லை. முழுக்க முழுக்க தவறான முறையிலேயே இருக்கிறது. அந்த கேங்குக்கு (மாயா, ஜோவிகா, பூர்ணிமா, ரவீனா, மணி, நிக்சன், ஐஷு) ஒரு நல்ல இயல்புடைய Bullying கிடையாது. இந்த கேங்குக்கு சுத்தமாக நகைச்சுவை உணர்வே கிடையாது. மிகவும் வக்கிரமான மிகவும் கேவலமான நகைச்சுவை உணர்வு தான் இருக்கிறது. ஒருவர் அழும் போது அவர்களுக்கு சிரிக்கத் தோன்றும். யாராவது கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்கு சிரிக்கத் தோன்றும். இது ஏதோ வடிகட்டி எடுத்த விஷப்பாட்டிலையும் தாண்டிய எப்படி சொல்வது நேபாம் என்ற திரவத்தின் பாட்டில்களை போன்று இருக்கிறார்கள். வியட்நாமில் எல்லாம் கொத்து கொத்தாக கொலை செய்வதற்கு அந்த திரவத்தை பயன்படுத்துவார்கள். இந்த கேங் அப்படியான ஒரு நேப்பாம் கேங் தான். அவ்வளவு விஷத்தன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் அருகில் போனாலே நமக்கு நான்கு நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்.” மேலும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட சுசித்ராவின் அந்த முழு பேட்டி இதோ…