"அவர் மனநோயாளி கிடையாது!"- RED CARD வாங்கி பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு குரல் கொடுக்கும் சுசித்ரா! வீடியோ இதோ

பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு குரல் கொடுக்கும் பாடகி சுசித்ரா,singer suchithra about pradeep antony state of mind in bigg boss tamil season 7 | Galatta

இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனி கடந்த வாரத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஆரம்பம் முதலே தனக்கென தனி பாணியில் சிக்ஸர்களும் பௌண்டரிகளும் என அடித்து ஆடிய பிரதீப் ஆண்டனி கிட்டதட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சட்ட திட்டங்களும் நுணுக்கங்களும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த ஒரு கடினமான போட்டியாளராகவே மற்ற போட்டியாளர்களுக்கு மிகுந்த சவாலாக வலம் வந்தார். இருந்தாலும் அவர் மீது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மற்ற சில போட்டியாளர்கள் எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததன் காரணமாக ரெட் கார்ட் வழங்கப்பட்டு உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதனை தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது சரியில்லை என #UNFAIR என்ற HASHTAG-ஐ ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டி கொடுத்த பிரபல பாடகி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 குறித்து பல முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் “வைல்ட் கார்டு போட்டியாளர்கள் VJ அர்ச்சனா உட்பட அனைவரையுமே ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் போட்டு விட்டார்கள். அவர்களை, “நாங்கள்தான் சீனியர்கள் எங்கெல்லாம் ஜூனியர்கள்” என்கிற மாதிரி ஒன்று செய்தார்கள். பிரதீப் ஆண்டனியும் கூட அதை கொஞ்சம் செய்தார்.” எனக் கேட்டபோது,

“பிரதீப் ஒரு நல்ல இயல்புடையதாக இருக்கும் என்று தானே நினைத்து செய்தார். கொஞ்சம் அடிபட்ட ஒரு மனது உலகத்தையே பட்டாம் பூச்சி மாதிரி தான் பார்க்கும். முதலில் உலகில் இருக்கும் அழகை பார்க்க சொல்லித்தான் மனம் சொல்லும். அதன் பிறகு தான் குறையை பார்க்க தோன்றும். அவரே குறைகளை ஒதுக்கி வைத்து விட்டு அழகை மட்டும் பார்க்கிறேன் அழகை மட்டும் பார்க்கிறேன் என்று இருக்கிறார். சத்தியமாகவே அவர் மிகவும் அழகான மனதுடையவர். மேலும் அவர் மனநிலை பாதிப்புடையவர் கிடையவே கிடையாது. அவர் மிகவும் சரியான ஒரு சாதாரண மனிதன். ஒரு சிறு வயதில் நடந்த பாதிப்பு இருக்கிறது. அது பிரார்த்தனைகள் மூலம் சரி செய்ய முடியும். அவருடைய மனதிற்குள் ஆழ சென்று பார்த்தால் என்ன கோவம் இருக்கும். அவருடைய பெற்றோர்கள் இருவரையும் கடவுள் எடுத்துக் கொண்டார் என்ற கோபம் தானே இருக்கும். அவ்வளவுதான் விஷயம். கடவுளிடம் கோபித்துக் கொள்ளாதே அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டார்கள். அவர்கள் இருவருமே தோல்வியடைந்தவர்கள் என்று அவரிடம் சொல்ல வேண்டும். உன்னை மாதிரி ஒரு தங்கமான பையனை அவர்கள் இழந்துவிட்டார்கள் அது அவர்களுடைய இழப்பு என சொல்ல வேண்டும்”

என தெரிவித்திருக்கிறார். மேலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து பல முக்கியமான விஷயங்கள் பற்றி பேசிய பாடகி சுசித்ராவின் அந்த சிறப்பு பேட்டி இதோ…