கார்த்தியின் ஜப்பான் - ராகவா லாரன்ஸ் & SJ சூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLEX படங்களின் தீபாவளி ரிலீஸுக்கு கிடைத்த செம்ம பூஸ்ட்! விவரம் உள்ளே

ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா DOUBLEX படங்களுக்கு ஸ்பெஷல் ஷோ அனுமதி,japan and jigarthanda double x movies got special show permissions | Galatta

இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளியை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா இணைந்து நடித்திருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X & இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் ரெய்டு ஆகிய மூன்று திரைப்படங்கள் வருகிற நவம்பர் 10ஆம் தேதி வெளிவர இருக்கின்றன. இந்த நிலையில் இந்த தீபாவளி திருவிழா கொண்டாட்டத்தை மனதில் கொண்டு ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. நடிகர் கார்த்தியின் ஜப்பான் மற்றும் ராகவா லாரன்ஸ் SJ சூர்யாவின் ஜிகர்தண்டா DOUBLE X ஆகிய திரைப்படங்களுக்கான ஸ்பெஷல் ஷோக்கள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 

சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கான அனுமதிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிலையில் காலை 9:00 மணி முதலான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா DOUBLE X ஆகிய இரண்டு படங்களுக்கும் வருகிற நவம்பர் 10ஆம் தேதி முதல் - நவம்பர் 15 ஆம் தேதி வரை தொடர்ந்து ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்புக்காட்சி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் வீதம் ஆறு நாட்களுக்கு ஸ்பெஷல் ஷோக்கள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சிகள் காலை 9AM மணிக்கு தொடங்கப்பட்டு, இரவு 1.30AM மணிக்குள் முடிவடைய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தீபாவளி பரிசாக ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா DOUBLE X ஆகிய இரண்டு படங்களுக்கும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்பெஷல் காட்சிகள் குறித்து வெளியான அந்த அறிக்கை இதோ…

dhanush in captain miller release postponed to 2024 pongal arun madheswaran dhanush in captain miller release postponed to 2024 pongal arun madheswaran

ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களின் ஒருவராக திகழும் நடிகர் கார்த்தியின் 25வது படம் தான் ஜப்பான். இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வாகை சந்திரசேகர் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்யும் ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2வது பாகமான ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தை தற்போது கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கி இருக்கிறார். ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து இந்த ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ஷைன் டேம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், இளவரசு மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். திரு அவர்கள் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.