தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். தப்பு பண்ணிட்டேன் என்ற இந்த புதிய ஆல்பம் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா A.K.ப்ரியன் எனும் சுயாதீன இசையமைப்பாளரை இந்த பாடலின் மூலம் அறிமுகப்படுத்துகிறார். பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணன் எழுதியுள்ள இந்த பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தோடு இணைந்து அபி & அபி என்டர்டெயின்மென்ட் மற்றும் NOICE & GRAINS இணைந்து தயாரித்துள்ளனர்.
 
தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல இளம் கதாநாயகனான காளிதாஸ் ஜெயராம் மற்றும் இளம் நடிகை மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள இந்தப் பாடலுக்கு பிரபல நடன இயக்குனரும் பிக்பாஸ் பிரபலமான சாண்டி மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ளார். மேயாத மான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான விது அய்யனா ஒளிப்பதிவில் இயக்குனர் டாங்லி ஜம்போ இயக்கியுள்ளார். 

இந்தப் புதிய ஆல்பம் பாடலின் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அடுத்ததாக காளிதாஸ் ஜெயராம் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.பிரபல நடிகை தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.