தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் STR.இவர் நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் சிம்பு.

வெந்து தணிந்தது காடு படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.கெளதம் மேனன் இந்த படத்தினை இயக்குகிறார்.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா,அச்சம் என்பது மடமையடா படங்களை அடுத்து சிம்பு கெளதம் மேனன்,ரஹ்மான் உள்ளிட்டோர் இணைவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
ஏற்கனவே உடலெடையை குறைத்த சிம்பு இந்த படத்திற்காக இன்னும் 15 கிலோ குறைத்துள்ளார்.

ராதிகா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.