தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து கலகலப்பான ஃபேமிலி என்ற திரைப் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் சுந்தர்.சி. இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து வரும் சுந்தர்சி கடைசியாக விஜய்யுடன் இணைந்து நடித்த பட்டாம்பூச்சி திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சுந்தர்.சி நடிப்பில் தலைநகரம் 2 வல்லான் மற்றும் ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்சி இயக்கத்தில் ஜீவா மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காஃபி வித் காதல்.

குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள நகைச்சுவையான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் காஃபி வித் காதல் திரைப்படத்தில் DD-திவ்யதர்ஷினி, ஸ்ரீகாந்த், அமிர்தா, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், சம்யுக்தா சண்முகநாதன், ஐஸ்வர்யா தத்தா, ரெட்டின் கிங்ஸ்லி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

காஃபி வித் காதல் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசைய்மைத்துள்ளார்.  முன்னதாக காஃபி வித் காதல் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த ரம்பம்பம் கிளாசிக் பாடலின் ரீக்கிரஷன் பாடல் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது அடுத்த பாடலாக தியாகி பாய்ஸ் பாடல் வெளிவர உள்ளது. 

இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் நாளை ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்பாடலின் கலக்கலான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…